ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் இந்திய அணியில் தங்களது வாய்ப்பை இழக்கப்போகும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வீரர்களின் தேர்வில் முக்கிய பங்கினை வகிக்கும் என்று கூறப்பட்டது. ஏனெனில் உலக கோப்பைக்கு முன்னதாக சரியான அணி வீரர்களை தேர்வு செய்ய நல்ல ஒரு பரிட்சையாக இந்த ஐபிஎல் தொடரானது அமையும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில் அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என பலரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

MI Mumbai Indians

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் தேர்வில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணியில் விளையாடி வரும் குறிப்பிட்ட மூன்று வீரர்கள் இந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிப்பது கஷ்டம் என்றும் அவர்கள் ஓரங்கட்ட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் நாங்கள் மூன்று வீரரை அந்த பட்டியலில் தொகுத்துள்ளோம்.

1) இஷான் கிஷன் : கடந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணிக்கு தேர்வான இஷான் கிஷன் துவக்க வீரராக இந்திய அணிக்கு சில போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிரடி ஓபனர் என்பதன் காரணமாக இவர் மீது இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் தொடருக்காக மும்பையிலும் சரி பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷன் இந்த ஐபிஎல் தொடரில் முற்றிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரை இந்திய அணியில் இருந்து கழட்டி விட வாய்ப்பு உள்ளது.

Venky-1

2) வெங்கடேஷ் ஐயர் : கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை ஒரு ஆல்-ரவுண்டராக வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் அவரது ஆட்டம் மிகவும் மோசமாக இருப்பதோடு மட்டுமின்றி கொல்கத்தா அணியில் இருந்தும் அவர் தற்காலிகமாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

அதேவேளையில் ஹர்திக் பாண்டியா தற்போது குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருவதோடு மட்டுமின்றி பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி வருவதால் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதால் வெங்கடேஷ் ஐயரும் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : தோனி மட்டும் அந்த முடிவு எடுக்காமல் இருந்திருந்தா – சென்னையின் பரிதாப தோல்வி பற்றி நட்சத்திர வீரர் சரியான பேச்சு

3) ருதுராஜ் கெய்க்வாட் : சென்னை அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் கெய்க்வாட் அற்புதமான ஆட்டக்காரர் என்றாலும் இந்த ஐபிஎல் தொடரில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. ஒரு இன்னிங்சில் மட்டும் அவர் 99 ரன்களை குவித்தாலும் மற்ற பல போட்டிகளில் அவர் தடுமாறி வருகிறார். ஏற்கனவே இந்திய அணியில் பல ஓப்பனர்கள் இருப்பதனாலும், இந்த ஐ.பி.எல் தொடரில் அவரது தடுமாற்றமான ஆட்டம் காரணமாகவும் அவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்ட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement