தோனி மட்டும் அந்த முடிவு எடுக்காமல் இருந்திருந்தா – சென்னையின் பரிதாப தோல்வி பற்றி நட்சத்திர வீரர் சரியான பேச்சு

CSK-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் துவக்கத்தில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை தக்க வைத்து 5-வது முறையாக கோப்பையை வென்று மும்பையின் சாதனையை சமன் செய்யும் என அந்த அணி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர் துவங்குவதற்கு ஒருசில நாட்கள் முன்பாக 4 கோப்பைகளை வென்று கொடுத்து சென்னையை 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக உருவாக்கிய எம்எஸ் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி அந்த பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். மறுபுறம் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ஜடேஜாவுக்கு அவர் உறுதுணையாக இருந்த போதிலும் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 4 போட்டிகளில் வரிசையாக தோற்ற சென்னையின் பிளே ஆஃப் கனவு அப்போதே பாதி பறிபோனது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

மேலும் முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பாகவே ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாபத்திற்கு உள்ளான ரவிந்திர ஜடேஜா கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என மொத்தத்திலும் சொதப்பினார். அதனால் இந்த பதவி நமக்கு செட்டாகாது என உணர்ந்த அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவதற்காக அந்த பதவியை தோனியிடமே வழங்கி விட்டார்.

வெளியேறும் சென்னை:
ஆனால் அதற்குள் 8 போட்டிகளில் 6 தோல்விகளை பெற்ற சென்னையின் பிளே ஆஃப் சுற்று கனவு 90% பறிபோனது. அதை தொடர்ந்து ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் கேப்டனாக வந்த தோனி தலைமையில் ருதுராஜ் – டேவோன் கான்வே ஆகியோரின் 182 ரன்கள் அமர்க்களமான பார்ட்னர்ஷிப் காரணமாக 13 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியை சென்னை பெற்றது. அந்த நிலைமையில் நேற்று பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற 10-வது போட்டியில் மீண்டும் பரிதாபமாக தோல்வியடைந்த அந்த அணி தற்போது மும்பையைத் தொடர்ந்து லீக் சுற்றுடன் 2-வதாக வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

Ravindra Jaddeja MS Dhoni

சென்னையின் தோல்விக்கு மோசமான பேட்டிங் சுமாரான பவுலிங் என்பதையும் தாண்டி எதிர்பாராத கேப்டன்ஷிப் மாற்றம் ஒரு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. ஏனெனில் கேப்டன்ஷிப் பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கலாம் என தோனி நினைத்திருந்தால் ஏற்கனவே தங்களது அணியில் விளையாடிய டு பிளேஸிசை முதலில் தக்க வைத்திருக்க வேண்டும் அல்லது ஏலத்தில் எத்தனை கோடியானாலும் செலவழித்து வாங்கி கேப்டனாக நியமித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தற்போது டு பிளசிஸ் தலைமையில் பெங்களூரு போடும் வெற்றிநடையை சென்னை இரு மடங்காக போட்டிருக்கும்.

- Advertisement -

தோனியின் தவறு:
அதை விட்டுவிட்டு அனுபவமில்லாத ஜடேஜாவிடம் கொடுத்து அவரின் ஆட்டத்தையும் கெடுத்து சென்னையின் தோல்விக்கும் வித்திட்ட பின்பு அதை மீண்டும் திரும்ப வாங்கியது என முதல் முறையாக ஒரு தோனி ஒரு தவறான முடிவை எடுத்துள்ளார். இப்படிப்பட்ட முடிவை மட்டும் அவர் எடுக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சென்னைக்கு இந்த பரிதாப நிலைமை ஏற்பட்டிருக்காது என்று முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதுபற்றி பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னை தோற்ற பின் அவர் பேசியது பின்வருமாறு.

Sehwag

“இந்த சீசனின் துவக்கத்தில் எம்எஸ் தோனிக்கு பதில் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக செயல்படுவார் என திடீரென அறிவித்ததே அவர்கள் செய்த முதல் தவறாகும். அதன் காரணமாக அவர்களின் பிளேயிங் 11 நிலையாக அமையவில்லை. ஆரம்பகட்டத்தில் ருதுராஜ் கைக்வாட் ரன்கள் அடிக்கவில்லை. ஆரம்பத்திலேயே அவர்களின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தடுமாறியதால் இறுதிவரை மொத்த சீசனும் சொதப்பும் அளவுக்கு ஆகிவிட்டது. சொல்லப்போனால் இப்போது கேப்டன்ஷிப் செய்யும் தோனி ஆரம்பம் முதலே கேப்டன்ஷிப் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஒருவேளை இவ்வளவு தோல்விகளைச் சென்னையும் சந்தித்திருக்காது” என்று கூறினார்.

- Advertisement -

அடுத்த கேப்டன்:
அத்துடன் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சென்னையின் தோல்விக்கான காரணத்தை பற்றி சேவாக் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியின் விக்கெட்டை மிகச் சிறப்பாக பந்துவீசி ஹேசல்வுட் எடுத்தது மிகவும் முக்கியமானதாகும். அதேபோல் கிளன் மேக்ஸ்வெல் போன்ற ஆப் ஸ்பின் பந்து வீச்சாளர்களை நன்கு எதிர்கொள்ளக்கூடிய ராபின் உத்தப்பா – அம்பத்தி ராயுடு போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறி அவுட்டானது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இதையும் படிங்க : 2011 க்கு பிறகு இந்திய அணியால் உலகக்கோப்பையை ஜெயிக்க முடியாததற்கு இதுவே காரணம் – யுவ்ராஜ் சிங் ஓபன்டாக்

கிளென் மேக்ஸ்வெல் ஒரு ஓவர் மட்டுமே பந்து வீசுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து 22 ரன்களை மட்டுமே கொடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார்” என்று தெரிவித்தார். இது போன்ற நிலையில் டு பிளேஸிசை கோட்டை விட்டதாலும் எம்எஸ் தோனிக்கு 40 கடந்து விட்டதாலும் சென்னையின் அடுத்த கேப்டன் யார் என்ற மிகப்பெரிய குழப்பமும் கவலையும் அந்த அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

Advertisement