2011 க்கு பிறகு இந்திய அணியால் உலகக்கோப்பையை ஜெயிக்க முடியாததற்கு இதுவே காரணம் – யுவ்ராஜ் சிங் ஓபன்டாக்

Yuvraj
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய அணி 2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியிலும் கோப்பையை கைப்பற்றியது. இப்படி ஐசிசி நடத்திய மூன்று விதமான தொடர்களையும் கைப்பற்றிய ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையும் தோனி படைத்திருந்தார். அதோடு தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசியின் அனைத்துவிதமான தொடர்களையும் கைப்பற்றி தங்களது அசாத்தியமான வெற்றி நடையை தொடர்ந்தது.

Ind-1

- Advertisement -

ஆனால் அதற்கடுத்து இந்திய அணி எதிர்கொண்ட பல ஐசிசி தொடர்களை கைப்பற்ற முடியாமல் போனது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை அளித்தது. ஏனெனில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி அதோடு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 தொடர் என எந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

அதிலும் குறிப்பாக 2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2021 டி20 உலகக் கோப்பை என இரண்டிலுமே இந்திய அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்று பலராலும் கணிக்கப்பட்டு இருந்த வேளையில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஐசிசி தொடரையும் கைப்பற்றாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இதுகுறித்த தனது கருத்தினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியால் கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அந்த வகையில் 2011-ஆம் ஆண்டு நாங்கள் உலக கோப்பையை வென்றபோது எங்கள் அணியில் இருந்த அனைவருக்கும் ஒரு நிலையான பேட்டிங் ஆர்டர் இருந்தது. மேலும் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை முன்கூட்டியே தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் நிலையான பேட்டிங் ஆர்டர் கிடையாது. குறிப்பாக 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது கடைசி நேரத்தில் இந்திய அணி தேர்வு செய்யப்படத்தில் எந்தவித வீரர்களுக்கும் எந்தெந்த பேட்டிங் ஆர்டர் என்று முடிவு செய்யாமலேயே அந்த தொடருக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க : விராட் கோலி சீக்கிரமா இந்த முடிவை கையில் எடுத்தே ஆகனும் – முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் பேட்டி

அதுதான் அந்த உலகக் கோப்பையில் தொடரில் தவறை ஏற்படுத்தியது. அதேபோன்று டி20 உலகக் கோப்பை தொடரிலும் வீரர்களின் இடம் என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே இனிவரும் உலக கோப்பை தொடரில் எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த வீரர்கள் விளையாடபோகிறார்கள் என முன்கூட்டியே முடிவு செய்து பேட்டிங் ஆர்டரை நிலைப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் கோப்பையை கைப்பற்ற முடியும் என யுவராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement