விராட் கோலி சீக்கிரமா இந்த முடிவை கையில் எடுத்தே ஆகனும் – முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் பேட்டி

Prasad
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பல வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஆகியோரது பார்ம் மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் தடுமாறி வருகின்றனர்.

Rcbvsmi

- Advertisement -

அதோடு அவர்களது பேட்டிலிருந்து பெரிய அளவில் ரன் குவிப்பு இதுவரை வரவில்லை. அதிலும் குறிப்பாக விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடுவதால் மிகப்பெரிய அளவில் தனது பார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 216 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

அதிலும் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் அரைசதம் அடித்த அவர் மீதமுள்ள போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதோடு கடந்த 2019-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் தவித்து வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் பார்முக்கு திரும்புவது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது அறிவுரைகளை தொடர்ந்து விராட் கோலிக்கு வழங்கி வருகின்றனர்.

Virat Kohli

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் கோலிக்கு ஒரு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும் ஒரு வீரராக அவர் விளையாடி வருகையில் நல்ல மனநிலை என்பது அவருக்கு முக்கியமான ஒன்று.

- Advertisement -

தற்போது மிகப்பெரும் அழுத்தத்திற்கு மத்தியில் விளையாடி வரும் அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவர் இந்த முடிவை வெகுவிரைவில் எடுத்தாக வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : விராட் கோலி ஒரு குறிப்பிட்ட இடைவெளியை எடுத்தால் மட்டுமே அவர் நல்ல புத்துணர்ச்சியோடு அணிக்கு திரும்ப முடியும். ஆசிய கோப்பைக்கு முன் அவர் இந்த ஓய்வினை எடுத்து மீண்டும் மனதளவில் பலம் பெற்று அணிக்கு திரும்பினால் தான் அது இந்திய அணிக்கு நன்மையை தரும்.

இதையும் படிங்க : ரவிந்திர ஜடேஜாவை பழிக்கு பழி தீர்த்த ஆர்சிபி வீரர் – ரசிகர்களை எகிற வைக்கும் பரபர பின்னணி

டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா, விராத் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகிய மூவரும் மூவரும் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். எனவே இந்த மூன்று பேருடைய பார்ம் என்பது இந்திய அணிக்கு அத்தியாவசியமான ஒன்று என எம்.எஸ்.கே பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement