வேகமாக சேசிங் செய்ய இதான் காரணம்.. 2024 டி20 உ.கோ தொடரிலும் அவங்கள அடிப்பேன்.. ஹெட் பேட்டி

Travis Head 3
- Advertisement -

அனல் பறக்க நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே எட்டாம் தேதி நடைபெற்ற 57வது லீக் போட்டியில் லக்னோவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த லக்னோ திணறலாக விளையாடி 166 ரன்கள் மட்டுமே இலக்காக கொடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 48*, ஆயுஷ் படோனி 55* ரன்கள் எடுத்தனர்.

ஆனால் அதை சேசிங் செய்த ஹைதராபாத் அணி வேறு ஏதோ பிட்ச்சில் பேட்டிங் செய்வது போல் லக்னோ பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி 9.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது. அந்த அணிக்கு சரவெடியாக விளையாடிய துவக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா 75* (28) ரன்களும் டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்களும் அடித்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் ஹெட்:
அதனால் 7வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த வெற்றிக்கு 89* ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ரன்ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் இடைவெளி முடிந்ததும் வேகமாக சேசிங் செய்ய முடிவெடுத்ததாக ஹெட் கூறியுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையிலும் ஸ்பின்னர்களை இதே போல் அடித்து நொறுக்குவேன் என்றும் ஹெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று நிறைய ஜாலியாக இருந்தது. 10 ஓவர்களில் முடித்தது நன்றாக இருந்தது. அபியும் (சர்மா) நானும் இதே போல சில பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். நல்ல இடத்தில் கவனம் செலுத்தி பந்தை பார்த்து கடினமாக அடித்து பவர் பிளேவை அதிகம் பயன்படுத்திக் கொள்வதே எங்களுக்கு திட்டமாகும். ஸ்பின்னர்களை அடிப்பதற்காக என்னுடைய ஆட்டத்தில் கொஞ்சம் வேலை செய்தேன்”

- Advertisement -

“கரீபியனில் நடக்கும் டி20 உலகக் கோப்பையிலும் அது பெரிய வேலை செய்யும். நவீன கிரிக்கெட்டில் 360 டிகிரியில் அடிப்பது முக்கியம். ஆஸ்திரேலிய அணியில் கடந்த 12 மாதங்களாக என்னை பயமின்றி விளையாட சொன்னார்கள். இங்கேயும் அதையே சொன்னதால் நான் பெரிய மாற்றத்தை செய்யவில்லை. கடினமாக உழைத்து ஆழமாக சிந்திக்கக்கூடிய அபிஷேக் ஷர்மா ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்கிறார்”

இதையும் படிங்க: ஆமை போல லக்னோ திணறிய அதே பிட்ச்சில்.. 9.4 ஓவரில் சூறையாடிய ஹைதராபாத்.. தனித்துவ ஐபிஎல் சாதனை

“கடந்த சில போட்டிகளுக்குப் பின் மீண்டும் அவர் ரன்கள் அடிப்பதை பார்ப்பது நன்றாக உள்ளது. தண்ணீர் இடைவெளியின் போது எங்களுடைய வீரர்கள் வந்து ரன் ரேட்டை பெறுவதற்காக வேகமாக அடிக்குமாறு சொன்னார்கள். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது. கடந்த 2 தோல்விகளுக்கு பின் இது போன்ற வெற்றி எங்களுக்கு தேவை. ஹைதராபாத் அணிக்காக முதல் சீசனில் வார்னரை விட அதிக ரன்கள் அடித்துள்ளேன் என்பது நல்ல உணர்வை கொடுக்கிறது. அடுத்தப் போட்டியிலும் இங்கே நாங்கள் இதே போல விளையாடுவோம்” என்று கூறினார்.

Advertisement