- Advertisement -
இந்திய கிரிக்கெட்

15வது வருடம்.. அடக்கத்தை கத்துக்கிட்டோம்.. சச்சினுக்கு கேக் ஊட்டி சர்ப்ரைஸ் வாழ்த்து கூறிய யுவி.. காரணம் இதோ

இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் டி20 லீக் 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அந்தத் தொடரில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி விளையாடுகிறது.

அதில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் குமார் சங்ககாரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில் அடுத்தப் போட்டிக்காக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயிற்சிகளை மேற்கொண்டு பெவிலியன் திரும்பினார். அப்போது யுவராஜ் சிங் தலைமையில் சக இந்திய வீரர்கள் கேக் வைத்துக் கொண்டு அவரை வரவேற்றார்கள்.

- Advertisement -

சச்சினின் சரித்திரம்:

அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி 2010 இதே நாளில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை அடித்த முதல் வீரர் என்ற சரித்திர உலக சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்தார். குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற அப்போட்டியில் ஓப்பனிங் வீரராக களமிறங்கி அபாரமாக விளையாடிய சச்சின் 200* ரன்கள் அடித்தார். அப்போது “இந்த கிரகத்தில் இரட்டை சதத்தை அடித்த முதல் மனிதர். அவர் இந்தியாவிலிருந்து வந்த சூப்பர்மேன்” என்று ரவி சாஸ்திரி வர்ணித்ததை மறக்க முடியாது.

அந்த வரலாற்றுச் சாதனையின் 15வது வருட நினைவுகளை கொண்டாடும் வகையில் சச்சினுக்கு ஸ்பெஷல் கேக் வெட்டி யுவ்ராஜ் தலைமையிலான இந்திய அணியினர் கொண்டாடினர். அதை ஏற்றுக் கொண்ட சச்சின் “அந்தப் போட்டியில் நான் நாட் அவுட்டாக இருந்தேன். அதனாலேயே இன்னும் என்னுடைய காலில் பேடை அணிந்துள்ளேன்” என்று சொன்னார்.

- Advertisement -

அடக்கத்தை கற்றுக்கொண்டோம்:

அதாவது அன்று அவுட்டாகாமல் அணிந்திருந்த கால் பாதுகாப்பு உபகரணத்தை இன்று வரை அணிந்திருப்பதாக சச்சின் கலகலப்பாக சொன்னார். அப்போது அனைத்து இந்திய வீரர்களும் மகிழ்ச்சியுடன் கைதட்டி பாராட்டினார்கள். தொடர்ந்து யுவ்ராஜ் பேசியது பின்வருமாறு. “இரட்டைச் சதத்தை அடித்த முதல் மனிதர். அது இவருக்கு மற்றுமொரு சாதாரண நாள்”

இதையும் படிங்க: அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்பை பலவீனமா பாக்குறாங்க.. ஆனா அதை வெச்சு தான் இதை செய்றேன்.. கோலி பேட்டி

“ஆனால் எப்போதும் அடக்கத்துடன் இருப்பதை அன்றைய நாளில் நாங்கள் அவரிடம் கற்றுக் கொண்டோம்” என்று சச்சினை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து கேக் வெட்டிய சச்சின் யுவ்ராஜுக்கு ஊட்டி கன்னத்தில் தடவி விட்டார். பின்னர் அவரும் சச்சினுக்கு கேக் ஊட்டி கன்னத்தில் தடவி விட்டார். சச்சின் ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -