இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 27000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக விளையாடி வரும் அவர் 82 சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவானாக அசத்தி வருகிறார். இருப்பினும் பகலானால் இரவு வரும் என்பது போல் 2023 உலகக் கோப்பைக்கு பின் அவர் தடுமாற்றமாக விளையாடி வந்தார்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தார். அவருடைய சுமாரான ஆட்டத்தால் அந்த 2 தொடர்களிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக பேசாமல் ஓய்வு பெறலாம் என்று விராட் கோலி கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.
பலவீனமே பலம்:
இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அவர் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார். துபாயில் சவாலான பிட்ச்சில் 242 சேசிங்கில் நங்கூரமாக விளையாடிய விராட் கோலி தன்னுடைய 51வது ஒருநாள் சத்தத்தை இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் அனைவரும் அவுட் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தம்முடைய பலவீனத்தை பார்ப்பதாக விராட் கோலி கூறியுள்ளார்.
ஆனால் அதையே வைத்து கவர் ட்ரைவ் அடித்து நாட்டுக்காக ஆயிரக்கணக்கில் ரன்களை குவித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானுக்கு எதிராக ஆசியக் கண்டத்தில் நீங்கள் விளையாடும் போது அந்த சூழல் கலகலப்பானதாக இருக்கும். ஏனெனில் மைதானத்தில் இரு நாடுகளுக்கும் சமமான ரசிகர்கள் இருப்பார்கள்”
சேசிங் நாயகன்:
“அந்த சூழ்நிலையில் அசத்தியது அணியாக எங்களுக்கு இது சிறந்த நாள். தனிப்பட்ட முறையில் எனக்கும் இது சிறந்த நாள். கடந்த பல வருடங்களாக அது என்னுடைய பலவீனமாக இருக்கிறது. ஆனால் அதே ஷாட்டில் நான் ஏராளமான ரன்கள் குவித்துள்ளேன். இன்று அதை அடிப்பதற்கு நான் ஆதரவு கொடுத்துக் கொண்டேன். முதல் சில பௌண்டரிகளை எழும்பி வந்த பந்துகளில் கவர் ட்ரைவ் பயன்படுத்தி தான் அடித்தேன்”
இதையும் படிங்க: கப்பார் ஸ்டைலில் இந்திய அணியில் விருந்தாளியாக வந்த தவான்.. தொடையில் தட்டி ஸ்பெஷல் விருதை பரிசளிப்பு
“அதற்காக கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டியுள்ளது. அதைப் பின்பற்றி கட்டுப்பாடு கிடைக்கும் போது நன்றாக உணர்கிறேன். 3வது இடத்தில் ஆபத்தைக் குறைத்து எனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே நான் செய்ய நினைக்கும் விஷயமாகும். அப்படி செய்யும் போது வெற்றிகரமாக ஆட்டத்தை ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அது இன்னும் சிறந்தது. அது போன்ற சூழ்நிலைகளையே நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.



