அவருக்கு மட்டும் தொடர்ந்து சான்ஸ் கொடுத்தா நிச்சயமா உ.கோ ஜெயிச்சு கொடுப்பாரு – தடுமாறும் இந்திய வீரருக்கு யுவி மெகா ஆதரவு

Yuvraj
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்த இந்தியா 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து 26 தொடர்களுக்கு பின் முதல் முறையாக 2 – 1 (3) என்ற கணக்கில் ஒரு ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இத்தொடரில் இந்தியா இப்படி தோல்வியை சந்தித்து ஐசிசி தர வரிசையில் தன்வசம் வைத்திருந்த நம்பர் ஒன் இடத்தையும் ஆஸ்திரேலியாவிடம் தாரை வார்த்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

அதை விட இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் டி20 கிரிக்கெட்டில் கடந்த 2 வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலிருந்தே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 180க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் பெரிய ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார்.

- Advertisement -

யுவி மெகா ஆதரவு:
குறிப்பாக அசால்டாக 3 சதங்களை அடித்து எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் கற்பனை செய்ய முடியாத புதுப்புது ஷாட்களால் ரன்களை குவிக்கும் அவரை இந்திய ரசிகர்கள் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட தரமான வீரரான அவர் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானது முதலே இதுவரை ஒரு சதம் கூட அடிக்காமல் 24.05 என்ற சுமாரான சராசரியில் பேட்டிங் செய்வது வருவது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.

குறிப்பாக கடைசி 14 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திணறும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு செட்டாக மாட்டார் என்று சமீப காலங்களாகவே ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் இத்தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டான அவருக்கு நியாயமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டதால் 2023 உலக கோப்பையை கருத்தில் கொண்டு சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு ரசிகர்கள் வலுவாக கோரிக்கை வைக்கிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் வரலாற்றின் மகத்தான ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் கூட இது போன்ற மோசமான தருணங்களை கடந்து வந்துள்ளதாக தெரிவிக்கும் இந்தியாவின் உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் சூரியகுமார் யாதவுக்கு தொடர்ந்து நம்பி வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக நமக்கு உலக கோப்பையை வென்று கொடுப்பார் என்று மெகா ஆதரவு கொடுத்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளிப்படையாக பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“விளையாட்டுத்துறையில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் தங்களது கேரியரில் மேடு பள்ளங்களை கடந்து செல்ல வேண்டும். நாங்கள் அனைவருமே இது போன்ற ஒரு மோசமான புள்ளிகளை ஏதோ ஒரு தருணத்தில் அனுபவித்துள்ளோம். எனவே சூரியகுமார் யாதவ் இந்தியாவின் துருப்பு சீட்டு வீரர் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் தேவையான வாய்ப்புகளை கொடுத்தால் அவர் நிச்சயமாக உலகக் கோப்பை வெல்வதில் முக்கிய பங்காற்றுவார். எனவே நமது வீரர்களுக்கு ஆதரவு கொடுப்போம். ஏனெனில் சூர்யா மீண்டும் உதயமாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:NZ vs SL : நாங்க ஒன்னும் பண்ண முடியாது, நியாயமான அவுட்டை கொடுக்காமல் அடம் பிடித்த அம்பயர்கள் – நடந்தது என்ன

அவர் கூறுவது போல வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேனாக கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 போட்டிகளில் டக் அவுட்டான முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். ஆனாலும் நாளடைவில் சிறப்பாக செயல்பட்ட அவர் உலகிலேயே அதிக ரன்கள் குவித்து 100 சதங்கள் அடித்து 2011 உலக கோப்பையும் இந்தியாவுக்கும் வென்று கொடுத்தார். எனவே அவரைப்போல தரமான வீரரான சூரியகுமாருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் உலக கோப்பை வென்று கொடுப்பார் என்று யுவராஜ் சிங் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement