
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்ததை அடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் மீது மிகப்பெரிய விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் இந்தத் தொடர் முழுவதுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்கள் இருவரும் இந்திய அணி தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இதன் காரணமாக அவர்கள் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
நடைபெற்று முடிந்த இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அனுபவ வீரர்களான இவர்கள் இருவரும் பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒரே மாதிரி ஆட்டம் இழந்து வெறும் 23 ரன்கள் சராசரியுடன் 190 ரன்கள் மட்டுமே குவித்தார்.
மறுபுறம் ரோஹித் சர்மா வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இப்படி இவர்கள் இருவருமே மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர்களது டெஸ்ட் எதிர்காலம் குறித்த கேள்வியும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த தொடர்க்கு பின் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் கூட : இனி அனுபவ வீரர்களாக இருந்தாலும் சரி உடற்தகுதியுடன் இருக்கும் அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று கட்டளை விதித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஆதரவாக பேசியுள்ள யுவராஜ் சிங் கூறுகையில் : நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி தோற்றது எனக்கும் தனிப்பட்ட முறையில் வருத்தம் தான்.
ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளில் நமது அணி பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். ஆஸ்திரேலிய தொடரை கூட நாம் இரண்டு முறை அவர்களது நாட்டில் வென்றுள்ளோம். மற்ற எந்த ஒரு அணியும் ஆஸ்திரேலியா நாட்டில் அந்த அணியை தொடர்ச்சியாக இரண்டு முறை வீழ்த்தியது கிடையாது. தற்போது ரசிகர்கள் பலரும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விமர்சித்து பேசுகின்றனர். ஆனால் அவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
இதையும் படிங்க : கே.எல் ராகுல் விடயத்தில் ரோஹித் சர்மா அந்த முடிவை எடுத்தே ஆகனும் – சஞ்சய் மஞ்சரேக்கர் பேட்டி
அவர்கள் இருவருமே கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். எனக்கும் அவர்களது இந்த மோசமான பேட்டிங் ஃபார்ம் வருத்தம் அளிக்கிறது தான். ஆனால் நிச்சயம் அவர்கள் இருவருமே அதிலிருந்து மீண்டு வருவார்கள் எனவே நாம் தான் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என யுவ்ராஜ் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.