கே.எல் ராகுல் விடயத்தில் ரோஹித் சர்மா அந்த முடிவை எடுத்தே ஆகனும் – சஞ்சய் மஞ்சரேக்கர் பேட்டி

Manjrekar
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 10 ஆண்டுகள் கழித்து இந்திய அணி இழந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அதற்கு அடுத்து நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷி தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது.

கே.எல் ராகுல் விடயத்தில் ரோஹித்தான் முடிவு எடுக்கனும் :

இந்த தொடரில் இந்திய அணியில் மோசமான தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த தொடரில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய கே.எல் ராகுல் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.

- Advertisement -

எந்த வரிசையில் களமிறங்கினாலும் அதிக பந்துகளை எதிர் கொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஆஸ்திரேலிய தொடரிலும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக துவக்க வீரராக அவர் சிறப்பாக விளையாடி வந்த வேளையில் ரோகித் சர்மா மீண்டும் துவக்க வீரருக்கான இடத்தை எடுத்துக் கொண்டதால் அவரது பார்ம் தடுமாற்றத்தை கண்டது.

வெளிநாடுகளில் எப்போதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாடும் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். எனவே இந்திய டெஸ்ட் அணியில் அவரே நிரந்தர துவக்க வீரராக விளையாட வேண்டும் என முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கே.எல் ராகுல் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலிய தொடரின் ஆரம்பத்தில் அவர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார்.

- Advertisement -

பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் 80 ரன்கள் வரை அடித்த அவர் மற்ற போட்டியிலும் அதிக பந்துகளை எதிர்கொண்டு மிகச்சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஆனாலும் அவர் துவக்க வீரருக்கான இடத்தை விட்டு மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட போது அவரது பேட்டிங் ஃபார்ம் சரிந்தது. எனவே என்னை பொறுத்தவரை அவர் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக மட்டுமே விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : என்ன சொன்னாலும் இங்கிலாந்தை நெருங்க முடியாது.. ஆனா ஆஸிக்கு இந்தியா தான் சரியானவங்க.. மைக்கேல் வாகன்

இதன் காரணமாக ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ராகுல் போன்ற ஒரு நல்ல டெக்னிக் உடைய வீரர் துவக்க வீரராக இருந்தால் அதிக பந்துகளை எதிர் கொண்டு நிலையான இன்னிங்சை விளையாட முடியும் என்பதால் ரோகித் சர்மா தனது பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொண்டால் அது கே.எல் ராகுலுக்கு நல்லது என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement