2024 டி20 உ.கோ இந்திய அணிக்கு கேப்டனாக சரியானவர் யார்? பாண்டியாவா – ரோஹித்தா? யுவி பதில்

Yuvraj Singh 3
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார்.

2022 டி20 உலகக் கோப்பையில் ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதனால் இம்முறை அவரை கழற்றி விட்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை பிசிசிஐ களமிறக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

யுவராஜின் பதில்:
அதற்கேற்றார் போல் கடந்த ஒன்றரை வருடமாக டி20 கிரிக்கெட்டில் விளையாடமல் இருந்து வந்த ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை ஐபிஎல் நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதனால் டி20 கேரியர் முடிந்ததாக சில செய்திகள் வந்தாலும் பாண்டியா காயமடைந்துள்ளதால் தற்போது ஆப்கானிஸ்தான் தொடரில் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா உலகக் கோப்பையிலும் இந்தியாவை வழி நடத்துவார் என்று நம்பப்படுகிறது.

ஆனாலும் இத்தொடரில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி சொதப்புவதால் உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்பட ரோகித்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவும் இருக்கிறது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அவசியமான வீரர் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் அனுபவத்தை எந்த விலையை கொடுத்தும் வாங்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கலாம் என மறைமுகமான ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்டியா தேவை. ஐபிஎல் போன்ற டி20 தொடரில் உங்கள் வயது அதிகமாகும் போது பிரச்சினையை சந்திப்பீர்கள். ஏனெனில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பும் முன்னுரிமையும் கொடுக்கும். நானும் இந்த சவால்களை சந்தித்துள்ளேன்”

இதையும் படிங்க: அஸ்வின்கிட்ட அவுட்டாகாம நாம் எஸ்கேப் ஆகிடுவேன்.. காரணம் அது தான்.. இங்கிலாந்து வீரர் பேட்டி

“ஆனால் உங்களால் அனுபவத்தை எதை வைத்தும் மாற்ற முடியாது. அந்த வகையில் ஏராளமான அனுபவத்தை கொண்டுள்ள ரோகித் சர்மா வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இருப்பினும் அவருடைய ஐபிஎல் அணி வருங்காலத்தை பார்க்கிறது. டி20 கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் செய்வதற்கு நிறைய வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே சொன்னது போல் அனுபவத்துக்கு எந்த மாற்று திறமையும் கிடையாது” என்று கூறினார்.

Advertisement