அஸ்வின்கிட்ட அவுட்டாகாம நாம் எஸ்கேப் ஆகிடுவேன்.. காரணம் அது தான்.. இங்கிலாந்து வீரர் பேட்டி

Ben Duckett
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்தத் தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலையிலான இங்கிலாந்து 12 வருடங்கள் கழித்து இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அந்த அணி தங்களுக்கு எவ்வளவு சவாலை கொடுக்கப் போகிறது என்பதை பார்க்க இந்திய ரசிகர்களும் காத்திருக்கின்றனர். ஏனெனில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இந்தியாவை ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை தாண்டி இங்கிலாந்து வெல்வது கடினமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் சவாலுக்கு தயார்:
அதிலும் ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதுமே சொந்த மண்ணில் எதிரணிகளை தெறிக்க விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மகத்தான ஸ்பின் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வின் இம்முறையும் தம்மை அவுட்டாக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து வீரர் பென் டுக்கெட் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொதுவாகவே இடது கை பேட்ஸ்மேன்களை மட்டுமே அதிகமாக அவுட் செய்யக்கூடிய அஸ்வினுக்கு எதிராக வலது கை பேட்ஸ்மேனான தாம் சரியான டெக்னிக்கை பயன்படுத்தி அவுட்டாகாமல் தப்பிப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். இந்த வருடங்களில் எனக்கு நல்ல முதிர்ச்சி கிடைத்துள்ளது பெரிய அம்சமாகும்”

- Advertisement -

“எனவே இம்முறை இந்தியா எனக்கு எதிராக எதை வீசினாலும் அதை ஆச்சரியப்படாமல் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அங்குள்ள சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ஏற்கனவே விளையாடியுள்ளேன். அதனால் அங்கே களமிறங்கும் போது என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். மேலும் அஸ்வினுக்கு எதிராக சுழலுக்கு சாதகமான மைதானங்களில் தடுமாறுவதற்கு நான் இடது கை பேட்ஸ்மேன் கிடையாது”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ டிக்கெட் கம்மியா இருக்குன்னு தெரிஞ்சே அடிக்கிறாரு.. இளம் வீரரை பாராட்டிய ஓஜா

“உலகத்தரம் வாய்ந்த பவுலரான அவர் இம்முறையும் என்னை அவுட்டாக்குவார் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது நான் எந்த வகையான பிட்ச்சிலும் அசத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளேன். குறிப்பாக சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருந்தாலும் கடந்த 18 மாதங்களில் இங்கிலாந்து அணி விளையாடிய விதத்தில் என்னுடைய பலம் என்ன என்பது எனக்கு தெரியும். எனவே இந்தியாவின் சவாலை கண்டு நான் ஆச்சரியப்படப்போவதில்லை” என்று கூறினார்.

Advertisement