டி20 உலககோப்பையில் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் பந்துவீசுவாரா? – பயிற்சியாளர் கொடுத்த விளக்கம்

Mitchell-Marsh
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ் ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். அந்த வகையில் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாடிய மிட்சல் மார்ஷ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் டெல்லி அணியில் இருந்து விலகி நாடு திரும்பினார்.

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்குள் காயத்திலிருந்து மீண்டு விடுவாரா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்தும் மிட்சல் மார்ஷ்-சின் தற்போதைய நிலை குறித்தும் பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்டு கூறுகையில் : காயத்திலிருந்து மீள்வதற்கான செயல்பாடுகளை தற்போது மிட்சல் மார்ஷ் மேற்கொண்டு வருகிறார்.

அவரது காயம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவைவிட சற்று மெதுவாக தான் காயம் குணமாகி வருகிறது. ஐபிஎல் தொடரிலிருந்து அவர் தற்போதைக்கு விலகி உள்ளதால் நல்ல ஓய்வில் இருந்து வருகிறார்.

- Advertisement -

இன்னும் டி20 உலக கோப்பை தொடருக்கு ஒரு மாதம் இடைவெளி இருப்பதால் நிச்சயம் அவர் தயாராவதற்கு போதுமான நேரம் உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்கள் அவரால் பந்துவீச முடியாது. அதன்பின்னர் இம்மாத இறுதியில் அவர் பந்துவீச்சு பயிற்சியையும் தொடர்வார் என்பதினால் நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடரின் போது அவரால் பந்து வீச முடியும் என மெக்டொனால்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உண்மையா அவரோட ஓவர் தான் டர்னிங் பாய்ண்ட்.. கடைசி ஓவரில் இதான் என்னோட திட்டம்.. முகேஷ் பேட்டி

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இதுவரை 54 போட்டிகளில் விளையாடி 1432 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு 42 டெஸ்ட் போட்டிகளிலும், 89 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Advertisement