உங்களோட சாதனைகளை நெருங்கனுனா அது.. – விராட் கோலி பதவி விலகல் குறித்து யுவ்ராஜ் சிங் நெகிழ்ச்சி

Yuvi
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி நேற்று மாலை திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து சில நாட்களிலேயே பதவி விலகும் முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் பதவி விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அவரது இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது இந்த முடிவினை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 40 வெற்றிகளை பெற்றவர்.

- Advertisement -

அது மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை குவித்த அவர் மிகச் சிறந்த வீரர்களை கட்டமைத்து இந்திய அணியை கடந்த பல ஆண்டுகளாகவே நம்பர் ஒன் அணியாக மாற்றி வெற்றிகரமாக வழியமைத்தவர்.

இந்நிலையில் அவரது இந்தப் பதவி விலகல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : உங்களின் இந்த பயணம் எங்களால் மறக்க முடியாத ஒன்று. வெகு சிலரால் மட்டுமே நீங்கள் செய்த சாதனைகளை நெருங்க முடியும். அந்த அளவிற்கு உங்கள் சாதித்து உள்ளீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக நீங்களே காரணம் – பி.சி.சி.ஐ யை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்

நீங்கள் இந்திய அணிக்காக விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே உங்களது கடின உழைப்பைக் கொடுத்து ஒவ்வொருமுறையும் ஒரு உண்மையான சாம்பியன் போன்று விளையாடி உள்ளீர்கள். மேலும் இன்னும் நீங்கள் வலிமையுடன் முன்னோக்கி செல்லவேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement