திரைப்படமாகும் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை.. தோனியை ஓரங்கட்டும் வகையில் அவரே வெளியிட்ட 3 மாஸ் அறிவிப்பு

Yuvraj SIngh
- Advertisement -

பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். 2000 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தினார்.

அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் ப்ராட்க்கு எதிராக ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர் அடித்ததை யாராலும் மறக்க முடியாது. அதே போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தார்.

- Advertisement -

யுவராஜ் அறிவிப்பு:
அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2011 உலகக் கோப்பையில் 362 ரன்களையும் 15 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் 28 வருடங்கள் கழித்து தோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்றார். அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அவர் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்த விதம் ஒவ்வொரு இந்திய ரசிகனாலும் எப்போதும் மறக்க முடியாது.

அதன் பின் புற்றுநோயையும் போராடி வீழ்த்திய அவர் மீண்டும் இந்தியாவுக்காக கம்பேக் கொடுத்து 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடினார். அதைத் தொடர்ந்து 2019இல் ஓய்வு பெற்ற அவர் அவ்வப்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தம்முடைய வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை திரைப்படமாக எடுக்க உள்ளதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

- Advertisement -

அந்தப் படத்தை தாமே தயாரித்து, திரைக்கதை எழுதி, இயக்கி, நடிக்க உள்ளதாகவும் யுவராஜ் அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்தப் படம் இன்னும் சில வருடங்களில் திரைக்கு வரும் என்று கூறியுள்ள அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “என் பகுதியில் நான். எனது சொந்த சுயசரிதை படத்தில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக என்னை அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ளேன்”

இதையும் படிங்க: அனல் பறக்கும் ஐபிஎல்.. மயங் யாதவை மிஞ்சிய மும்பை வீரர்.. 0.31 கி.மீ வேகத்தில் தவறிய 13 வருட சாதனை

“அதற்காக வாழ்த்துங்கள் நண்பர்களே. இன்னும் ஓரிரு வருடத்தில் பெரிய திரையில் இறுதி முடிவை பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்டேட்டுகளுக்காக காத்திருங்கள்” என்று கூறியுள்ளார். முன்னதாக தோனியின் சுயசரிதை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கண்டது. சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான அப்படத்தில் தோனியின் கதை மற்றும் வரலாறு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படத்தை மிஞ்சும் அளவுக்கு நடித்து, இயக்க உள்ளதாக யுவராஜ் கூறியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement