அனல் பறக்கும் ஐபிஎல்.. மயங் யாதவை மிஞ்சிய மும்பை வீரர்.. 0.31 கி.மீ வேகத்தில் தவறிய 13 வருட சாதனை

Coetzee and Mayank
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெற்று கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. இந்த வருடமும் சில இளம் வீரர்கள் ஆச்சரியத்தை கொடுக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான 21 வயது இளம் வீரர் மயங் யாதவ் முதல் போட்டியிலேயே அனைவரது பாராட்டுகளை பெற்றார்.

ஏனெனில் பஞ்சாப்புக்கு எதிராக ஆரம்பம் முதலே 145 – 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய அவர் அனைவரையும் வியக்க வைத்தார். குறிப்பாக நட்சத்திர இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு எதிராக 155.80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய அவர் ஐபிஎல் 2024 தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

தவறிய சாதனை:
அப்படியே 4 ஓவரில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து ஜானி பேர்ஸ்டோ போன்ற 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் லக்னோ முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் பிரட் லீ, டேல் ஸ்டைன், ஸ்டுவர்ட் ப்ராட் மகத்தான வெளிநாட்டு ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

அந்த நிலையில் நேற்று மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. ஒரு தலைப்பட்சமாக நடைபெற்ற அப்போட்டியில் வெற்றி முழுமையாக பறிபோன பின் 15.3வது பந்தை மும்பைக்காக விளையாடும் தென்னாப்பிரிக்க இளம் வீரர் ஜெரால்ட் கோட்சி 157.4 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார். அதை சரியாக எதிர்கொள்ளாத ரியான் பராக் பேட்டில் பட்ட பந்து எட்ஜ் வாங்கி பவுண்டரி பறந்தது.

- Advertisement -

ஆனாலும் அதன் வாயிலாக ஐபிஎல் 2024 தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற மயங் யாதவ் சாதனை உடைத்த ஜெரால்ட் கோட்சி புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜெரால்ட் கோட்சி : 157.4, ராஜஸ்தானுக்கு எதிராக*
2. மயங் யாதவ் : 155.8, பஞ்சாப்புக்கு எதிராக
3. மயங் யாதவ் : 153.9, பஞ்சாப்புக்கு எதிராக
4. மயங் யாதவ் : 153.4, பஞ்சாப்புக்கு எதிராக
5. நன்ரே பர்கர் : 153, டெல்லிக்கு எதிராக

இதையும் படிங்க: இந்தாங்க ஆதாரம்.. கெய்லை விட பெஸ்ட்.. ரோஹித்துக்கு சமம்.. விராட் கோலிக்கு புள்ளிவிவரத்துடன் பதான் ஆதரவு

சொல்லப்போனால் இன்னும் 0.31 கிலோமீட்டர் வேகத்தில் அதிகமாக வீசியிருந்தால் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற புதிய வரலாற்றையும் ஜெரால்ட் கோட்சி படைத்திருப்பார். ஆனால் நூலிலையில் அவர் தவற விட்ட அந்த சாதனையின் பட்டியல்:
1. ஷான் டைட் : 157.71, 2011
2. ஜெரால்ட் கோட்சி : 157.4, 2024*
3. லாக்கி பெர்குசன் : 157.3, 2022
4. உம்ரான் மாலிக் : 157, 2022
5. அன்றிச் நோர்ட்ஜெ : 156.22, 2020

Advertisement