இந்தாங்க ஆதாரம்.. கெய்லை விட பெஸ்ட்.. ரோஹித்துக்கு சமம்.. விராட் கோலிக்கு புள்ளிவிவரத்துடன் பதான் ஆதரவு

Irfan Pathan 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கான இந்திய அணியை ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அந்தத் தொடரில் விராட் கோலியை கழற்றி விட தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. ஏனெனில் விராட் கோலி எப்போதும் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யும் ஸ்டைலை கொண்டவர் என்பதை அனைவரும் அறிவோம். மறுபுறம் வெஸ்ட் இண்டீஸில் பெரும்பாலான பிட்ச்கள் ஸ்லோவாக இருக்கும்.

- Advertisement -

இந்தாங்க ஆதாரம்:
எனவே அங்கு நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் அணுகுமுறை பொருந்தாது என்று தேர்வுக் குழு கருதுகிறது. அதனால் கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் ஸ்டைலை கொண்ட விராட் கோலியை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இந்திய தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டின் சச்சின் என்று கருதப்படும் கிறிஸ் கெயிலை (137.51) விட விராட் கோலி அதிக ஸ்ட்ரைக் ரேட்டை (138.16) கொண்டுள்ளதாக இர்பான் பதான் கூறியுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் பவர் ஹிட்டர்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு நிகராக விராட் கோலியின் சர்வதேச டி20 ஸ்ட்ரைக் ரேட் இருப்பதாக இர்பான் பதான் புள்ளி விவரத்துடன் பேசியுள்ளார். எனவே 2024 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற விராட் கோலி விளையாடுவது அவசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அனைவரும் விராட் கோலியை பற்றி பேசுகின்றனர். எனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் கிறிஸ் கெயிலை விட சிறப்பாக இருக்கிறது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். அதே போல இந்தியாவின் பவர் ஹிட்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியா 139 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார். விராட் கோலி 138 கொண்டுள்ளார். எனவே அதற்கிடையே பெரிய வித்தியாசம் இல்லை”

இதையும் படிங்க: திடீரென அருகில் ஓடிவந்த ரசிகர்.. மிரண்டு போன ரோஹித் சர்மா.. கட்டியணைத்த பின்னரே ரிட்டர்ன் – நடந்தது என்ன?

“ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 139. விராட் கோலி 138. இந்த நேரத்தில் எப்போதும் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அடித்த 82* ரன்களை நினைவில் கொள்ளுங்கள். விராட் கோலி பற்றி உங்கள் மனதில் கேள்வி எழும்போதெல்லாம் அவர் பெரிய இடத்தில் விளையாடக்கூடிய மேட்ச் வின்னர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அழுத்தத்தின் கீழ் சேசிங் செய்வதைப் பற்றி நன்றாக தெரிந்த விராட் கோலியை கேள்வி கேட்பதில் எந்த நியாயமும் இல்லை” என்று கூறினார்.

Advertisement