திடீரென அருகில் ஓடிவந்த ரசிகர்.. மிரண்டு போன ரோஹித் சர்மா.. கட்டியணைத்த பின்னரே ரிட்டர்ன் – நடந்தது என்ன?

Rohit-Fan
- Advertisement -

நடப்பு 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வேளையில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவருக்கு மத்தியில் முதலில் விளையாடிய மும்பை அணி ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 125 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

ராஜஸ்தான் அணி சார்பாக ட்ரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வேளையில் ராஜஸ்தான் அணி எளிதாக 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 127 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்து பரிதாப நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி விளையாடிக் கொண்டிருந்த வேளையில் மைதானத்திற்குள் நுழைந்த ரோகித் சர்மாவின் ரசிகர் அவரை நோக்கி வேகமாக ஓடிச் சென்றார்.

- Advertisement -

அப்போது அதனை எதிர்பாராத ரோகித் சர்மா சற்று திடுக்கிட்டு பின்னர் சுதாரித்துக் கொண்டார். உடனே தன்னை நோக்கி வந்த அந்த ரசிகரை கட்டியணைத்த அவர் மைதானத்திலிருந்து வெளியேறும்படி அன்பு கட்டளையிட்டார். உடனே அங்கிருந்து நகர்ந்த அந்த ரசிகர் நேராக இஷான் கிஷனிடம் சென்று அவரையும் கட்டியணைத்த பின்னரே மீண்டும் மைதான காவலாளர்கள் மூலம் வெளியேற்றப்பட்டார்.

இதையும் படிங்க : பாண்டியா எம்மாத்திரம்.. ரோஹித்தையே கழற்றி விட்ட மும்பை மறுபடியும் அதை செய்வாங்க.. மனோஜ் திவாரி அதிரடி

ஏற்கனவே ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராகவும், ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கோஷங்களை எழுப்பி வரும் வேளையில் தற்போது பாண்டியாக கேப்டனாக செயல்பட்ட இந்த போட்டியில் மும்பை மைதானத்தில் ரோகித் சர்மாவை ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து கட்டி அணைத்தது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement