பாண்டியா எம்மாத்திரம்.. ரோஹித்தையே கழற்றி விட்ட மும்பை மறுபடியும் அதை செய்வாங்க.. மனோஜ் திவாரி அதிரடி

Manoj Tiwari 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமனம் செய்தது. அதற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் உச்சகட்ட எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த எதிர்ப்புக்கு மத்தியில் இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் பாண்டியா தலைமையில் தோல்வியை சந்தித்த மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது. மேலும் ஹைதராபாத்துக்கு எதிராக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 277 ரன்கள் வாரி வழங்கிய மும்பை பாண்டியா தலைமையில் மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

அதிரடி முடிவு:
மும்பையின் இந்த தோல்விகளுக்கு சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி பும்ராவை சரியாக பயன்படுத்தாதது போன்ற பாண்டியாவின் கேப்டன்ஷிப் தவறுகள் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. அதனால் ஒவ்வொரு போட்டியிலும் மும்பை ரசிகர்களே பாண்டியாவுக்கு எதிராக உச்சகட்ட எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர் தோல்விகளால் கேப்டன்ஷிப் பொறுப்பை மீண்டும் ரோஹித் சர்மாவிடம் மும்பை நிர்வாகம் ஒப்படைப்பதற்கான வாய்ப்புள்ளதாக மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவையே கழற்றி விட மும்பை நிர்வாகம் கொஞ்சமும் யோசிக்கவில்லை என்று திவாரி கூறியுள்ளார். எனவே பாண்டியாவிடம் உள்ள மும்பை கேப்டன்ஷிப் மீண்டும் ரோஹித் கைக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“மும்பை அணியின் கேப்டன்ஷிப் மீண்டும் ரோகித் சர்மாவின் கையில் ஒப்படைக்கப்படலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்கள் எப்போதுமே முடிவுகளை எடுப்பதற்கு தயங்கக் கூடியவர்கள் அல்ல என்பதை நான் புரிந்துள்ளேன். ரோகித் சர்மா 5 கோப்பைகளை வென்று கொடுத்தும் அவரிடமிருந்த கேப்டன்ஷிப் பொறுப்பை பறித்த மும்பை நிர்வாகம் பாண்டியாவிடம் ஒப்படைத்தது. கேப்டனை மாற்றுவது என்பது மிகப்பெரிய முடிவாகும். ஆனால் இந்த வருடம் அவர்கள் எடுத்த புதிய முடிவில் எந்த நேர்மறையான புள்ளியும் கிடைக்கவில்லை”

இதையும் படிங்க: ஒரே ஆள் 3 மும்பை வீரர்கள். வான்கடே மைதானத்தில் நடந்த தரமான சம்பவம் – தண்ணி காட்டிய ட்ரென்ட் போல்ட்

“மும்பைக்கு அதிர்ஷ்டமின்மையால் தோல்விகள் கிடைக்கவில்லை. அதே போல கேப்டன்ஷிப் நன்றாக இருந்தது என்றும் சொல்ல முடியவில்லை. உண்மையாகவே பாண்டியாவின் கேப்டன்ஷிப் அந்தளவுக்கு நன்றாக இல்லை” என்று கூறினார். முன்னதாக 2022இல் ஜடேஜாவிடம் ஒப்படைத்த சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை தொடர் தோல்விகளால் தோனி மீண்டும் பெற்றார். அதே போல ரோஹித்தின் கைக்கு மீண்டும் மும்பையின் கேப்டன்ஷிப் பொறுப்பு வருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement