ஒரே ஆள் 3 மும்பை வீரர்கள். வான்கடே மைதானத்தில் நடந்த தரமான சம்பவம் – தண்ணி காட்டிய ட்ரென்ட் போல்ட்

Boult
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்ததிலிருந்து மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டிகளின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. ஏனெனில் கேப்டன்சி மாற்றம் ரோகித் சர்மாவின் பதவி பறிப்பு, முன்னணி வீரர்கள் ஹார்டிக் பாண்டியாவிற்கு ஆதரவாக இல்லாதது என்ன பல்வேறு குழப்பங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ச்சியாக நீடித்து வரும் வேளையில் அந்த அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்த வேளையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய தங்களது மூன்றாவது லீக் போட்டியிலும் ராஜஸ்தான் அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியானது ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 127 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் அந்த அணிக்கு எதிராகவே மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக தனது முன்னாள் அணியான மும்பை அணிக்கு எதிராக நேற்றைய துவக்க ஓவரில் பந்துவீசிய போல்ட் முதல் ஓவரிலேயே 5-ஆவது பந்தில் ரோகித் சர்மாவையும், 6-ஆவது பந்தில் நமன் திர்ரையும் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழக்க வைத்து வெளியேற்றினார்.

இதையும் படிங்க : இதெல்லாம் ஜீரணிக்க முடியல.. தோனியை ஃபாலோ பண்ணுங்க.. பாண்டியாவுக்கு நவ்ஜோத் சித்து அட்வைஸ்

அதனை தொடர்ந்து மூன்றாவது ஓவரின் 2-ஆவது பந்தில் ப்ரேவிஸ்சையும் அவர் கோல்டன் டக் அவுட் முறையில் வீழ்த்தி தரமான சம்பவத்தையும் செய்துள்ளார். பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களது சொந்த மைதானத்திலேயே வீழ்த்த போல்ட் ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்ததால் அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement