அவரு பேட்டிங் பண்றத பாத்தா அப்படியே நான் ஆடுறே மாதிரியே இருக்கு.. இளம்வீரரை மனதார பாராட்டிய – யுவ்ராஜ் சிங்

Yuvraj-Singh
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் கடந்த 2000-ஆவது ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி 2017-ஆம் ஆண்டு வரை 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்களையும், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன்களையும், 58 டி20 போட்டிகளில் விளையாடி 1177 ரன்களையும் குவித்துள்ளார். இன்றளவும் இந்திய அணியின் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் அவர் 2007 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போது தொடர் நாயகன் விருதினை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது ஓய்வுக்கு பின்னர் இந்திய அணி மிகச் சிறந்த இடதுகை பேட்ஸ்மேன்கள் இன்றி இன்றளவும் சோபிக்காமல் இருந்து வரும் வேளையில் தற்போது இந்திய அணியில் மெல்ல மெல்ல இடது கை ஆட்டக்காரர்களின் வருகை அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய அணிக்காக திலக் வர்மா, சாய் சுதர்சன், ஷிவம் துபே மற்றும் ரிங்கு சிங் போன்ற சில வீரர்கள் மிடில் ஆர்டரில் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணிக்காக கடந்த ஆண்டு அறிமுகமான ரிங்கு சிங் இடதுகை பேட்ஸ்மேனாக மிக சிறப்பான பினிஷராக செயல்பட்டு வருகிறார். இதுவரை 13 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள ரிங்கு சிங் 180 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 69 ரன்கள் சராசரியுடனும் 278 ரன்களை குவித்துள்ளார். அதோடு போட்டிகளை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போதுள்ள இந்திய அணியில் ரிங்கு சிங்கின் பேட்டிங்கை பார்ப்பதற்கு தன்னை பார்ப்பது போன்றே இருக்கிறது என யுவ்ராஜ் சிங் பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது உள்ள இந்திய அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் திகழ்ந்து வருகிறார். மேலும் அவரது ஆட்டத்தை பார்க்கும்போது என்னுடைய ஆட்டத்தை பார்ப்பது போலவே இருக்கிறது.

- Advertisement -

ஏனெனில் அந்த அளவிற்கு அவர் எந்த நேரத்திலும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறார். மேலும் எப்படி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து ஆட வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார். பிரஷரான சூழலில் கூட அவரது நேர்த்தியான பேட்டிங் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி அவர் நமக்காக பின்வரிசையில் களமிறங்கி போட்டிகளையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கிறார்.

இதையும் படிங்க : அஸ்வின் இந்தியாவுக்காக அந்த ஃபார்மட்டில் விளையாட தகுதியற்றவர்.. யுவராஜ் சிங் அதிரடியான கருத்து

எனவே தற்போது சூழலில் அவர் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்து அவரை அழுத்தத்தில் தள்ளக்கூடாது. நிச்சயம் அவரிடம் உள்ள திறமைக்கு இன்னும் அவரால் பல தூரம் இந்திய அணிக்காக பயணிக்க முடியும். என்னை பொறுத்தவரை ரிங்கு சிங் நம்பர் 5 அல்லது 6 ஆவது இடத்தில் களமிறங்கி இந்திய அணியின் சிறந்த பினிஷராக திகழ முடியும் என யுவ்ராஜ் சிங் மனதார பாராட்டியுள்ளார்.

Advertisement