அஸ்வின் இந்தியாவுக்காக அந்த ஃபார்மட்டில் விளையாட தகுதியற்றவர்.. யுவராஜ் சிங் அதிரடியான கருத்து

Yuvraj Singh 2
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அசத்திய காரணத்தால் தோனி தலைமையில் இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார்.

குறிப்பாக 2011 உலகக் கோப்பை வெற்றியில் தன்னுடைய பங்காற்றிய அவர் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் கடைசி ஓவரை கச்சிதமாக வீசி இந்தியா கோப்பையை வெல்வதற்கு உதவியதை மறக்க முடியாது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நிறைய விக்கெட்டுகளை எடுத்த அவர் தவிர்க்க முடியாத வீரராக அணியில் வலம் வந்தார்.

- Advertisement -

யுவி கருத்து:
இருப்பினும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தோனி கேப்டன்ஷிப் பதவியில் விலகிய 2017க்குப்பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அவருக்கு பெரிய ஆதரவை கொடுக்காமல் கழற்றி விட்டார். அதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் போராடி வந்த அஸ்வினுக்கு 2021, 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிய அவர் 2023 உலகக் கோப்பையிலும் கடைசி நேரத்தில் அக்சர் படேல் காயமடைந்ததால் தேர்வானார். அந்த தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அவருக்கு போட்டியாக தற்போது நிறைய இளம் வீரர்கள் வந்து விட்டதால் இனிமேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காது என்று உறுதியாக நம்பப்படுகிறது.

- Advertisement -

அதே போல ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் இன்னும் அவருக்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் நிலையான வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட அஸ்வின் தகுதியற்றவர் என்று யுவராஜ் சிங் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் கே.எல் ராகுல் கீப்பராக விளையாட மாட்டார் – பி.சி.சி.ஐ விளக்கம்

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் மகத்தான பவுலர். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை. பந்து வீச்சில் அவர் நன்றாக செயல்படுவார். ஆனால் பேட்டிங்கில் அவரால் அணிக்கு என்ன செய்ய முடியும்? அல்லது ஃபீல்டராக என்ன உதவ முடியும்? டெஸ்ட் அணியில் அவர் இருக்க வேண்டும். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் இந்திய அணியில் அவர் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று நான் கருதவில்லை” எனக் கூறினார்.

Advertisement