இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் கே.எல் ராகுல் கீப்பராக விளையாட மாட்டார் – பி.சி.சி.ஐ விளக்கம்

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட 16 வீரர்கள் கொண்ட இந்த இந்திய அணியில் மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தென்னாப்பிரிக்க மண்ணில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதோடு அவர் சமீப காலமாகவே கீப்பராக சிறப்பாக விளையாடி வருவதால் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வேளையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பின்படி : கேஎல் ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு முழுநேர பேட்ஸ்மேனாகவே விளையாடுவார். அவர் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

ஏனெனில் விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் தொடர்ந்து பயணிக்கும் பட்சத்தில் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர் கிடையாது. எனவே அந்த இடத்தில் நாங்கள் ஒரு முழுமையான ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பரை கொண்டு வர நினைக்கிறோம்.

- Advertisement -

அதன் காரணமாக பேட்டிங்கில் திறன் வாய்ந்த அவர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் முழுநேர பேட்ஸ்ட்மேனாக மட்டுமே விளையாடுவார் என்று அறிவித்துள்ளது. அதேவேளையில் கே.எஸ் பரத் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய இருவருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள வேளையில் கே.எஸ் பரத் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக ஒரு சில போட்டிகளில் விளையாடி உள்ளதால் அவருக்கு இந்த இங்கிலாந்து தொடரில் கம்பேக் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

இதையும் படிங்க : என் பையனுக்கு நான் எப்போவுமே கோச்சிங் குடுக்க மாட்டேன். ஏன் தெரியுமா? – ராகுல் டிராவிட் கொடுத்த விளக்கம்

இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் அவர் தொடர்ச்சியாக டெஸ்ட் அணியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று மற்றொரு விக்கெட் கீப்பரான துருவ் ஜுரேல் 22 வயதே ஆன இளம்வீரர் என்பதனால் அவரை டெஸ்ட் அணியில் வளர்த்தெடுக்க ஒரு வாய்ப்பினை இந்த தொடரில் வழங்கினாலும் வழங்கலாம் என்று தெரிகிறது.

Advertisement