என் பையனுக்கு நான் எப்போவுமே கோச்சிங் குடுக்க மாட்டேன். ஏன் தெரியுமா? – ராகுல் டிராவிட் கொடுத்த விளக்கம்

Samit-Dravid
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கடந்த 1996-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2012-ஆம் ஆண்டு வரை 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ராகுல் டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கிரிக்கெட் தொடர்பான பணிகளையே மேற்கொண்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக இளம் வீரர்களை கண்டறிந்து உருவாக்குவது அவர்களை முன்னேற்றுவது என்று பல வேலைகளை செய்து கொண்டிருந்த அவர் தற்போது இந்திய சீனியர் அணிக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது மகனான சமித் டிராவிட் 18 வயதை எட்டியுள்ள வேளையில் தற்போது கர்நாடக அணிக்காக கூச் பெஹர் டிராபியில் விளையாடி வருகிறார். இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை கர்நாடக அணி முன்னேற சமித் டிராவிடின் பங்களிப்பும் முக்கியம் என்றால் அது மிகையல்ல.

அந்த அளவிற்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அவர் கைகொடுத்து வருகிறார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 37 ரன்கள் சராசரியுடன் 3 அரைசதங்களுடன் 370 ரன்கள் குவித்துள்ளார். அதோடு பந்துவீச்சிலும் மூன்று விக்கெடுகளை கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஆல்ரவுண்டாக வளர்ந்து வரும் தனது மகன் சமித் டிராவிடுக்கு நான் எப்போதுமே பயிற்சி அளிக்க மாட்டேன் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் எப்போதுமே என் மகனுக்கு பயிற்சி அளிப்பது கிடையாது. ஏனெனில் ஒரு பெற்றோராகவும் மற்றும் பயிற்சியாளராகவும் இருப்பது கடினம். அதன் காரணமாகவே நான் அவருக்கு பயிற்சி அளிப்பதில்லை.

இதையும் படிங்க : மெசேஜ்ல பேசிருக்கேன்.. சீக்கிரம் இந்தியாவுக்கு போய் அவர நேர்ல பாக்கணும்.. டென்னிஸ் லெஜெண்ட் ஜோக்கோவிக்

நான் சமித்திற்கு ஒரு தந்தையாக இருப்பதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். அதனைத் தாண்டி ஒரு பயிற்சியாளராக என்னால் அவருக்கு எப்படி உதவ முடியும் என்று தெரியவில்லை. நான் அவருக்கு நல்ல ஒரு தந்தையாகவே இருக்க விருப்பப்படுகிறேன் என ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement