மெசேஜ்ல பேசிருக்கேன்.. சீக்கிரம் இந்தியாவுக்கு போய் அவர நேர்ல பாக்கணும்.. டென்னிஸ் லெஜெண்ட் ஜோக்கோவிக்

Novok Djokovic
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்சமயத்தில் சர்வதேச அரங்கில் உச்சகட்ட நட்சத்திர வீரராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடித்தார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் எதிரணிக்களுக்கு சவாலை கொடுத்து வரும் அவர் இந்தியாவுக்கு நிறை வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

இதுவரை 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80* சதங்களையும் அடித்துள்ள அவர் ஜாம்பவான் சச்சினையே மிஞ்சி நிறைய சாதனைகளையும் படைத்து வருகிறார். அந்த வகையில் தற்சமயத்தில் கிரிக்கெட்டின் அடையாளமாக இருக்கிறார் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சார் விவ் ரிச்சர்ட்ஸ் பாராட்டும் அளவுக்கு விராட் கோலி உலக அரங்கில் மிகப்பெரிய விளையாட்டு வீரராக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

நேர்ல பாக்கணும்:
அதே போல களத்திற்கு வெளியே இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கால்பந்து ஜாம்பவான்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு வீரர் என்ற மகத்தான பெருமைக்கும் விராட் கோலி சொந்தக்காரராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே விராட் கோலியுடன் மொபைல் போனில் தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் வீரராக போற்றப்படும் நோவாக் ஜோக்கோவிட்ச் தெரிவித்துள்ளார்.

மேலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை விரைவில் இந்தியாவுக்கு சென்று நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென பல வருடங்களாக நான் உணர்கிறேன். இந்தியாவுக்கு நான் ஒரே ஒரு முறை மட்டுமே சென்றுள்ளேன்”

- Advertisement -

“கடந்த 10 – 11 வருடங்களுக்கு முன்பாக புதுடெல்லியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் விளையாடுவதற்காக சென்றேன். விரைவில் மகத்தான வரலாறும் கலாச்சாரமும் மத நம்பிக்கையும் கொண்ட அந்த நாட்டுக்கு செல்வேன் என்று நம்புகிறேன். அங்குள்ள சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற விளையாட்டு வீரர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்”

இதையும் படிங்க: பெருமையா இருக்கு.. மேட்ச் வின்னரை செலக்ட் பண்ணிருக்கீங்க.. லெஜெண்ட் சங்ககாரா பாராட்டு

“குறிப்பாக கடந்த சில வருடங்களாக விராட் கோலியுடன் நான் குறுஞ்செய்தி தொடர்பில் இருக்கிறேன். ஆனால் இன்னும் நேரில் பார்க்கவில்லை. அவர் என்னை பற்றி பேசியது என்னுடைய கௌரவமாகும். அவருடைய கேரியர் மற்றும் சாதனைகளை நான் எப்போதும் ரசிக்கிறேன்” என்று கூறினார். முன்னதாக செர்பியாவை சேர்ந்த அவர் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ரோஜர் ஃபெடரர், ரபேல் நடால் போன்ற ஜாம்பவான்களுக்கு நிகரான டென்னிஸ் வீரராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement