பெருமையா இருக்கு.. மேட்ச் வின்னரை செலக்ட் பண்ணிருக்கீங்க.. லெஜெண்ட் சங்ககாரா பாராட்டு

Kumar Sangakara
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற உள்ள அத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடப் போகும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.

அதில் கேஎல் ராகுல், கேஎஸ் பரத் ஆகியோருடன் இளம் வீரர் துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக முதல் முறையாக இந்தியாவுக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடிக் கடந்த 2020 அண்டர்-19 உலகக் கோப்பை இந்திய அணியில் துணை கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

மேட்ச் வின்னர்:
அதில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்வான அவர் 11 இன்னிங்சில் 152 ரன்களை 172.73 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். மேலும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் 790 ரன்களை 46.50 என்ற சராசரியில் குவித்துள்ள அவர் வருங்கால திட்டங்களை கருத்தில் கொண்டு தற்போது விக்கெட் கீப்பராக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் தம்மை கவரும் வகையில் செயல்பட்ட துருவ் ஜுரேல் மேட்ச் வின்னர் என அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் இலங்கை ஜாம்பவான் வீரர் குமார் சங்ககாரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் தேர்வானதில் எனக்கு பெருமை மற்றும் மகிழ்ச்சி. ஏனெனில் ஐபிஎல் தொடரை தாண்டி இந்தியாவுக்காக தரமான வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே ராஜஸ்தான் அணியின் இலக்காக இருக்கிறது”

- Advertisement -

“அதை கடந்த சில வருடங்களாக செய்து வரும் எங்களுடைய அணியில் தற்போது துருவ் ஜுரேல் புதியவராக வந்துள்ளார். சிறந்த இளம் பையனான அவர் இன்று பிடித்துள்ள இந்த இடத்திற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளார். எங்களுடைய முன்னேற்ற முகாமில் இருந்த அவர் தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளது சிறப்பானதாகும்”

இதையும் படிங்க: ஆப்கன் அணிக்கெதிரான 2 ஆவது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் வேணாம்.. அவருக்கு பதில் இவருக்கு சேன்ஸ் குடுங்க – சுரேஷ் ரெய்னா

“அவரால் அழுத்தத்தை உணர்ந்து விளையாட முடியும். குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் மிகவும் கடினமான இடத்தில் களமிறங்கிய அவர் நிறைய ரன்கள் அடித்தார். தற்போதைக்கு அவர் டி20 கிரிக்கெட்டில் மேட்ச் வின்னராக இருக்கிறார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து நடைபெற உள்ள டெஸ்ட் தொடரில் ராகுல் மற்றும் பரத் ஆகியோர் இருப்பதால் அவருக்கு 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்றே சொல்லலாம்.

Advertisement