இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே மொஹாலி நகரில் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இந்தூர் நகரில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க காத்திருக்கிறது. அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முன்னைப்புடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க இருக்கிறது.
இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இரண்டாவது டி20 போட்டி நடைபெறும் இந்தூர் மைதானம் அளவில் சிறிய மைதானம். எனவே தமிழக சுழற்பந்து வீச்சளரான வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கானுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பினை வழங்க வேண்டும்.
மேலும் இந்த இரண்டாவது டி20 போட்டியில் விராட் கோலி நிச்சயம் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த போட்டியில் ஷிவம் துபே நான்கு ஓவர்கள் வீசுவது என்பது சவாலான ஒன்று. எனவே சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பினை வழங்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : விராட், ரோஹித் வந்தாலும்.. 2024 டி20 உ.கோ டீம்ல அந்த இளம் வீரர் விளையாடியே தீரனும்.. ஆகாஷ் சோப்ரா
இருப்பிடம் இரண்டாவது போட்டியின் டாசுக்கு பிறகு தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா என்னென்ன திட்டங்களை கையில் வைத்திருக்கிறார் என்பது தெரிய வரும். இருப்பினும் இரண்டாவது போட்டியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது.