விராட், ரோஹித் வந்தாலும்.. 2024 டி20 உ.கோ டீம்ல அந்த இளம் வீரர் விளையாடியே தீரனும்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 4
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரில் 14 மாதங்கள் கழித்து ரோஹித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அதே போல முதல் போட்டியில் சொந்தக் காரணங்களுக்காக விலகிய விராட் கோலியும் 2வது போட்டியில் விளையாட உள்ளார். அதனால் இந்த 2 நட்சத்திர ஜாம்பவான் வீரர்களும் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆனால் அவர்கள் விளையாடுவதால் சமீபத்திய தொடர்களில் அசத்திய ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது கடினமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கண்டிப்பா வேணும்:
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் வந்தாலும் 2024 டி20 உலகக் கோப்பையில் ரிங்கு சிங் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் ஃபினிஷராகவும் அசத்தக்கூடிய ரிங்கு சிங் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத குறையை தீர்க்கக் கூடியவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“நம்முடைய உலகக் கோப்பையில் அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் டாப் 6 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யும் போது அதில் ஒருவராவது இடது கை வீரராக இருக்க வேண்டும். எனவே ரோகித் சர்மா – விராட் கோலி ஆகியோர் துவக்க வீரர்களாகவும் சூரியகுமார் யாதவ் 3வது இடத்திலும் விளையாடலாம். உங்களின் டாப் 3 பேரில் விக்கெட் கீப்பர் இருக்க முடியாது”

- Advertisement -

“ஒருவேளை ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாடினால் ஒரு இடது கை பேட்ஸ்மேன் மட்டுமே மிடில் ஆர்டரில் விளையாட முடியும். இது போன்ற சூழ்நிலையில் ரிங்கு சிங் பொருத்தமானவராக இருக்கிறார். இடது கை பேட்ஸ்மேன்கள் என்று வரும் போது ரவீந்திர ஜடேஜா அல்லது ரிங்கு சிங் மிடில் ஆர்டரில் விளையாடுவார்கள்”

இதையும் படிங்க: 243 ரன்ஸ்.. கேட்ச்சில் மிரட்டிய டு பிளேஸிஸ்.. ஓப்பனிங்கிலேயே ஜேஎஸ்கே அணியை துவம்சம் செய்த எம்ஐ

“ஏனெனில் ரோகித், விராட் சூரியகுமார், ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் ஆகிய அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார். அதாவது ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு தவிர்க்க முடியாத ரோகித், விராட், சூரியகுமார் இருப்பதால் வாய்ப்பு கிடைக்காது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். எனவே மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய ரிங்கு சிங்கை தேர்வு செய்து இடது கை பேட்ஸ்மேன் குறையை போக்கலாம் என அவர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement