கொஞ்சம் தடுமாறுனாலும் 2003 ஃபைனல் ரிப்பீட்டாகலாம்.. எச்சரிக்கையா இருங்க.. யுவி வித்யாச கருத்து

Yuvraj Singh 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த லீக் மற்றும் செமி ஃபைனல் போட்டிகளில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இந்த 2 அணிகளுமே நட்சத்திர வீரர்களுடன் தரமானதாக இருப்பதால் கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி ஆஸ்திரேலியா தங்களுடைய 6வது உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணிக்கு சவாலை கொடுத்து 2011 போல சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த இந்தியா விளையாட உள்ளது.

- Advertisement -

எச்சரித்த யுவி:
குறிப்பாக 2003 உலகக் கோப்பை மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்களில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு இம்முறை பதிலடி கொடுத்து இந்தியா வெற்றி காணுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் 2003 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஃபைனலுக்கு வந்த ஆஸ்திரேலியா தங்களை வீழ்த்தி கோப்பையை வென்றதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அதே போலவே இம்முறை தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா தாங்களாக ஏதேனும் தவறு செய்யாமல் இருக்கும் வரை கண்டிப்பாக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக யுவராஜ் சிங் கூறியுள்ளார். அதனால் கொஞ்சம் தடுமாறினாலும் 2003இல் இந்தியாவைப் போல தற்போது ஆஸ்திரேலியா தோற்க நேரிடும் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த உலகக்கோப்பை இந்தியாவின் செயல்பாடுகளை பார்க்கும் போது அவர்கள் மோசமாக செயல்பட்டதாக எனக்கு தெரியவில்லை. எனவே இந்தியா தாங்களாக தவறு செய்தால் மட்டுமே இந்த உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது. தற்போது அவர்கள் உச்சகட்டமான தன்னம்பிக்கையை கொண்டுள்ளதாக நான் உணர்கிறேன். 2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா இதே போல அதிரடியாக விளையாடி ஃபைனலுக்கு வந்து எங்களை தோற்கடித்தது”

இதையும் படிங்க: ஃபைனலில் அஸ்வின் விளையாடுவாரா? ரசிகர்களின் கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த பதில்

“அதே போல இம்முறை இந்தியா அடித்து நொறுக்கி வருவதாக நான் கருதுகிறேன். எனவே ஃபைனலில் ஆஸ்திரேலியா அவர்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இல்லையெனில் இந்தியாவுக்கு எதிராக வெல்வதற்கு வாய்ப்பில்லை. அதே சமயம் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தத்தை எப்படி கையாள்வது என்று தெரியும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கூட தடுமாறிய போது கமின்ஸ் – ஸ்டார்க் அசத்தியதைப் போல அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் அவுட்டானாலும் போராடி வெல்லும் திறமையை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது” என்று கூறினார்.

Advertisement