ஃபைனலில் அஸ்வின் விளையாடுவாரா? ரசிகர்களின் கேள்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த பதில்

Rohit Sharma Press 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அஹமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகளின் முடிவில் வெற்றிகளைப் பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஆஸ்திரேலியா தங்களுடைய 6வது கோப்பையை வெல்வதற்கும் இந்தியா தங்களின் 3வது கோப்பையை வெல்லும் முனைப்புடனும் களமிறங்க உள்ளது. குறிப்பாக கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை உடைத்து 2011 போல சொந்த மண்ணில் லட்சியக் கோப்பையை முத்தமிடும் கனவுடன் இந்தியா விளையாட உள்ளது.

- Advertisement -

அஸ்வின் விளையாடுவாரா:
முன்னதாக இத்தொடரில் ஆஃப் ஸ்பின்னர் தேவை என்பதற்காக காயமடைந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக கடைசி நேரத்தில் தேர்வான தமிழகத்தின் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதுடன் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அதற்குப் பின் குல்தீப் – ஜடேஜா ஆகியோர் அணியின் கலவைக்கு போதுமானதாக இருப்பதால் கடந்த 8 போட்டிகளாக பெஞ்சில் அமர்ந்து வரும் அஷ்வினுக்கு கடைசி போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்குமா என்பது தமிழக ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகிய அடித்து நொறுக்கக்கூடிய இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க அஸ்வின் வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. சொல்லப்போனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரை தேர்வு செய்யாதது இந்தியாவின் தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்ததை யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

இந்நிலையில் இதே கேள்வியை போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரோகித் சர்மா பதிலளித்தது பின்வருமாறு. “எங்களுக்கு அனைத்து விதமான ஆப்ஷன்களும் இருக்கிறது. இருப்பினும் இப்போதே எங்களுடைய திட்டத்தை நான் வெளியிட விரும்பவில்லை. நாங்கள் விரும்பும் போது எந்த வீரர் வேண்டுமானாலும் விளையாடுவார்கள். எங்களுடைய வீரர்கள் தங்களுடைய வேலைகளை கடினமாக எடுத்துக் கொண்டுள்ளனர்”

இதையும் படிங்க: அவங்க 2 பேரும் இருக்குற வெறிக்கு வேர்லடுகப்பை ஜெயிக்காம விடமாட்டாங்க – ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்

“ஷமி தமக்கு கிடைத்த வாய்ப்பை அதிகமாக பயன்படுத்தியுள்ளார். அனைத்து வீரர்களுமே தரமானவர்கள். எனவே எங்களுக்கு 15 வீரர்களும் விளையாடுவதற்கு தயாரான சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடக்கூடிய அணி. இரு அணிகளுமே ஃபைனலில் விளையாடுவதற்கு தகுதியாக உள்ளன. அதில் ஆஸ்திரேலியா என்ன செய்யும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே நாங்கள் அணியாக எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியமாகும்” என்று கூறினார்.

Advertisement