அவங்க 2 பேரும் இருக்குற வெறிக்கு வேர்லடுகப்பை ஜெயிக்காம விடமாட்டாங்க – ஆஷிஷ் நெஹ்ரா புகழாரம்

Nehra
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது அரையிறுதி போட்டியிலும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த தொடரில் இதுவரை எந்த ஒரு அணியிடமும் தோல்வியை சந்திக்காத இந்திய அணி நவம்பர் 19-ஆம் தேதி நாளை நடைபெற உள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தொடரில் எதிர்பார்த்ததைவிட மிக பலம் வாய்ந்த அணியாகவும், வீழ்த்த முடியாத அணியாகவும் இருந்து வரும் இந்திய அணி இறுதிப் போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

தற்போது உள்ள இந்திய அணியில் ஒருவர் விட்டால் ஒருவர் என அனைத்து வீரர்களுமே தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்குவதால் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

தற்போது உள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலக கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற தாகத்துடன் காத்திருக்கின்றனர். ரோகித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே பயமின்றி ஆக்ரோஷமாக விளையாடி வருகிறார். ஏனெனில் அவருக்கு பின்னால் களத்தில் விராட் கோலி இருப்பார் என்ற நம்பிக்கையில் தான் ரோகித் சர்மா துவக்கத்திலேயே அதிரடியாக விளையாடுகிறார்.

- Advertisement -

அதேபோன்று ரோகித் சர்மா அதிரடியான துவக்கம் கொடுக்கும் பட்சத்தில் விராட் கோலி தனது நேரத்தை செலவிட்டு களத்தில் நின்று நீண்ட இன்னிங்க்ஸை விளையாடுகிறார். இப்படி இருவருமே தங்களுக்கான திட்டத்தை சரியாக வகுத்துக் கொண்டு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு கூட்டாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் நிச்சயம் உலக கோப்பையை வெல்லும் வரை ஓய மாட்டார்கள் என நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழக வீரர் அஸ்வின் பைனல்ல விளையாடணும்னா இந்த ஒரே வழி மட்டும் தான் இருக்கு – மத்தபடி நோ சேன்ஸ்

ஏற்கனவே இந்த உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பதாக பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நானோ விராட் கோலி இந்த உலகக்கோப்பை தொடரில் சதம் அடிப்பது முக்கியமில்லை. எங்களது ஆன்மா முழுவதும் இந்த உலகக் கோப்பையை வெல்ல மட்டுமே போராடும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement