தமிழக வீரர் அஸ்வின் பைனல்ல விளையாடணும்னா இந்த ஒரே வழி மட்டும் தான் இருக்கு – மத்தபடி நோ சேன்ஸ்

Ashwin
Advertisement

இந்திய அணியின் அனுபவ வீரரான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே ஒதுக்கப்பட்டு வந்த வேளையில் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடியிருந்தார். அதனை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தேர்வாகாத அவர் கடைசி நேரத்தில் அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அதிர்ஷ்டவசமாக இடம் பிடித்திருந்தார்.

அப்படி இடம்பெற்ற அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் களமிறங்கி விளையாடி இருந்தார். அந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்த அவர் அதனை தொடர்ந்து நடைபெற்ற 9 போட்டிகளில் ஒரு முறை கூட வாய்ப்பு பெறாமல் வெளியில் அமர்ந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நாளை நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் இறுதி போட்டிக்கான இந்திய அணியிலாவது அவர் இடம் பெறுவாரா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.

ஏனெனில் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டதாலும், ஆஸ்திரேலிய வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறுவதாலும் அவர் இடம் பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விரும்புகின்றனர். ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவோ அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் தொடர்ச்சியாக நிலையான அணியை வைத்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நாளை இறுதி போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெற வேண்டுமெனில் ஒரே ஒரு வழி மட்டும் தான் இருக்கிறது என்றும் அது தவிர்த்து வேறு எந்த வழியும் கிடையாது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் ஏதேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது காய்ச்சல் காரணமாக அவர்களால் விளையாட முடியாமல் போனாலோ கடைசி நேரத்தில் அஸ்வின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படலாம்.

இதையும் படிங்க : மெகா இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

மற்றபடி அஸ்வின் விளையாட வாய்ப்பே இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் 4000-திற்கும் மேற்பட்ட ரன்களையும், 700-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் எடுத்துள்ள அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை என்றாலும் இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக வீரர்களுக்கு போட்டிகளின் இடைவெளியின் போது தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை எடுத்துக்கொண்டு சென்று அறிவுரையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement