மெகா இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசியின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடைய உள்ளது. அதன்படி நாளைய இந்த பிரமாண்டமான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த தொடரில் இதுவரை எந்த ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டம் என்ற ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களை எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

அதற்கேற்றார் போன்று நமது அணியும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியும் இந்த தொடரின் ஆரம்பத்தில் இரண்டு தோல்விகளை சந்தித்திருந்த வேளையில் அதன்பிறகு தோல்வியையே சந்திக்காமல் மிகச் சிறப்பான முறையில் விளையாடி வருகிறது. இதன் காரணமாக இந்த போட்டி அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ரோகித் ஒரு நிலையான அணியை வைத்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருவதால் கட்டாயம் இந்த இறுதிப் போட்டியில் தேவையின்றி எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய மாட்டார் என்றே தெரிகிறது.

- Advertisement -

அதன்காரணமாக கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடிய அதே இந்திய அணியே இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் விளையாடும் என்று தெரிகிறது. அந்த வகையில் நாளைய இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நீங்க சொல்ற மாதிரி பிட்ச்ல அது நடந்துருக்கு.. எதை போட்டாலும் அடிப்போம்.. விமர்சனங்களுக்கு கமின்ஸ் பதில்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) முகமது ஷமி, 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement