நீங்க சொல்ற மாதிரி பிட்ச்ல அது நடந்துருக்கு.. எதை போட்டாலும் அடிப்போம்.. விமர்சனங்களுக்கு கமின்ஸ் பதில்

Pat Cummins 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்று உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் நல்ல பலத்தை கொண்டிருப்பதால் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

அதில் 5 கோப்பைகளை வென்றுள்ள அனுபவமிகுந்த ஆஸ்திரேலியா ஃபைனலில் எப்படி அசத்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை நன்கு தெரிந்த அணியாக இருக்கிறது. எனவே 2003 உலகக்கோப்பை மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போல இப்போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற போராட உள்ளது.

- Advertisement -

பிட்ச் பிரச்சனையல்ல:
மறுபுறம் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லாமல் நிற்க மாட்டோம் என்ற வகையில் 10 போட்டியில் தொடர்ச்சியாக எதிரணிகளை துவம்சம் செய்த இந்தியா இப்போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்களுடைய 3வது கோப்பையை முத்தமிடும் லட்சியத்துடன் விளையாட உள்ளது. முன்னதாக சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் இந்தியா வெல்வதற்காக வேண்டுமென்றே தங்களுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து வருவதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக எப்போதுமே ஐசிசி நாக் அவுட் போட்டிகளை அத்தொடரில் அதற்கு முன் பயன்படுத்தப்படாத பிட்ச்சில் நடத்துவதே வழக்கமாகும். ஆனால் இத்தொடரில் மட்டும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச்கள் இந்தியாவுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்ற அதே பிட்ச்சில் ஃபைனல் விளையாடப்படுவது உண்மை தான் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தாலும் ஃபைனல் நாளன்று இரு அணிகளுக்கும் பொதுவாக பிட்ச் கொடுக்கப்படுவதில் எந்த தவறுமில்லை என்று அவர் பதிலளித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது 2 அணிகளுக்கும் பொதுவானது. உங்களுடைய சொந்த நாட்டில் விளையாடும் போது பிட்ச்சில் உங்களுக்கு சில சாதகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதே போன்ற பிட்ச்சில் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் விளையாடியிருப்பீர்கள்”

இதையும் படிங்க: 2011இல் ப்ராட் ஹடின் செஞ்சதை மறக்கல.. ஆஸி எந்த லெவலுக்கும் இறங்குவாங்க.. இந்தியாவுக்கு ரெய்னா அட்வைஸ்

“அதே சமயம் நாங்களும் இங்கே நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். இந்த மைதானம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மைதானங்களிலும் டாஸ் வெல்வது முக்கியமல்ல. எனவே எங்கள் மீது வீசப்படும் அனைத்தையும் எதிர்கொண்டு திருப்பி அடிக்க தயாராக இருக்கிறோம். இருப்பினும் போட்டி நாளில் பிட்ச் பார்த்து விட்டு சில மாற்றங்களையும் திட்டங்களையும் நாங்கள் வகுக்க உள்ளோம்” என்று கூறினார்.

Advertisement