2011இல் ப்ராட் ஹடின் செஞ்சதை மறக்கல.. ஆஸி எந்த லெவலுக்கும் இறங்குவாங்க.. இந்தியாவுக்கு ரெய்னா அட்வைஸ்

Suresh Raina
Advertisement

ரசிகர்கள் காத்திருக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி நவம்பர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்க போகும் அந்த போட்டியில் லீக் மற்றும் செமி ஃபைனல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன.

அதில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி 6வது கோப்பையை தங்களுடைய அலமாரியில் வைப்பதற்காக ஆஸ்திரேலியா போராட உள்ளது. மறுபுறம் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் பார்த்து வரும் தோல்விகளுக்கு இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த முதல் புள்ளி வைக்க போராட காத்திருக்கும் இந்தியா 2003 உலகக் கோப்பை மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்விகளுக்கும் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

- Advertisement -

ரெய்னாவின் அட்வைஸ்:
இந்நிலையில் ஸ்லெட்ஜிங் செய்வதற்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலியர்கள் விளையாடும் போது கவனத்தை சீர்குலைப்பதற்காக வம்பிழுப்பார்கள் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். எனவே அதற்கு அசராமல் தொடர்ந்து கவனத்துடன் விளையாடி வெற்றி காணுமாறு இந்திய அணிக்கு ஆலோசனை தெரிவிக்கும் அவர் 2011 உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் இதே அகமதாபாத் மைதானத்தில் யுவராஜுடன் சேர்ந்து விளையாடிய தம்மை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ப்ராட் ஹாடின் ஸ்லெட்ஜ் செய்ததை பற்றி பேசியது பின்வருமாறு.

“ஆஸ்திரேலியா எங்களை பலமுறை ஸ்லெட்ஜிங் செய்ததை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். குறிப்பாக சிங்கிள் எடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் பிராட் ஹாடின் என் முன்பே வந்து சிலவற்றை சொல்வார். ஆனால் நாங்கள் தொடர்ந்து போட்டியில் கவனம் செலுத்தினோம். 2011 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணி பாண்டிங் தலைமையில் ஸ்லஜிங் செய்வது முதல் ஃபீல்டிங் செய்வது வரை அனைத்திலும் சிறப்பாக இருந்தது”

- Advertisement -

” அவர்களுக்கு எதிராக பரபரப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் கம்பீர், சச்சின் மற்றும் தோனி ஆகியோர் அவுட்டானதால் நான் பேட்டிங் செய்யும் நேரம் வந்தது. அப்போது என்னுடைய அருகில் இருந்த சச்சின் பாஜி போட்டியை முடித்து விட்டு வா என்று சொல்லி அனுப்பினார். அந்த நேரத்தில் எங்களுக்கு அதிகப்படியான ரன்கள் தேவைப்படவில்லை என்றாலும் அதிகமான அழுத்தம் இருந்தது”

இதையும் படிங்க: 50 ஆவது சதம் அடிச்சிட்டு சச்சினை பாத்து கோலி பண்ணாருல அதுதான் அவர் கேரக்டர் – முகமது கைப் புகழாரம்

“அப்போது நானும் யுவராஜும் பார்ட்னர்ஷிப் அமைத்ததுடன் ஆக்ரோஷமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினோம். தற்போதைய ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல் இரட்டை சதமடித்து அடுத்தடுத்த வெற்றிகளுடன் ஃபைனலுக்கு வந்துள்ளதால் அதிக தன்னம்பிக்கையுடன் இருக்கும். மறுபுறம் இந்திய அணி பேட்டிங் பவுலிங், ஃபீல்டிங் துறைகளில் அசத்துவதால் மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும். எனவே இந்த போட்டி மிகவும் விருந்தாக நமக்கு அமையும்” என்று கூறினார்.

Advertisement