23 வருஷமா என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சு போச்சு.. அடுத்தது உ.கோ தான் டார்கெட்.. நன்றியுடன் இந்திய அணியை வாழ்த்திய யுவி

Yuvraj Singh
- Advertisement -

ஐசிசி 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் பந்து வீச்சில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா 50 ரன்களுக்கு சுருட்டி 10 வித்தியாசத்தில் வென்று 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.

அதன் வாயிலாக அதிக ஆசிய கோப்பைகளை வென்ற அணி என்ற சாதனை படைத்த இந்தியா 51 ரன்களை 6.1 ஓவரில் சேசிங் செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு தொடரின் ஃபைனலில் அதிக பந்துகளை (263) மீதம் வைத்து அதிவேகமாக சேசிங் செய்த அணி என்ற உலக சாதனையும் படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் படுதோல்வியை சந்தித்த இலங்கை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோர் (50) பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனை படைத்தது.

- Advertisement -

யுவராஜ் பாராட்டு:
அப்படி ஆசிய கோப்பையை அதிரடியாக வென்றதை விட 23 வருட பழைய சம்பவத்திற்கு இலங்கையை பழிக்கு பழி தீர்த்து இந்தியா வெற்றி வாகை சூடியதே இந்திய ரசிகர்களுக்கு பெருமையாக அமைந்தது. அதாவது கடந்த 2000ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற கோகோகோலா சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சனாத் ஜெயசூர்யா 189 (161) ரன்கள் குவித்த உதவியுடன் 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய இந்தியாவுக்கு சௌரவ் கங்குலி 3, சச்சின் டெண்டுல்கர் 5, யுவராஜ் 3 போன்ற நட்சத்திர வீரர்கள் சமீந்தா வாஸ் 5, முரளிதரன் 3 விக்கெட்டுகளை எடுத்த அதிரடியில் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர். அதனால் 54 ரன்களுக்கு சுருண்ட இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது இன்றும் இருக்கிறது.

- Advertisement -

இருப்பினும் அதற்கு இந்த ஃபைனலில் இதை விட குறைந்த ஸ்கோருக்கு இலங்கையை சுருட்டி இந்தியா பழிதீர்த்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் 23 வருடங்களாக தம்முடைய மனதில் பாரமாக இருந்த அந்த தோல்வி இந்த வெற்றியால் தீர்ந்துள்ளது என்ற வகையில் யுவராஜ் சிங் ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் இதே ஃபார்மை பயன்படுத்தி 2023 உலகக் கோப்பையையும் வெல்ல வேண்டுமென இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அவர் இது பற்றி பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: நாட்டுக்காக தோனி செஞ்ச அந்த தியாகம் எத்தனை பேருக்கு தெரியும்? அவர் நம்ம கீப்பர்களின் வரமான இலக்கணம் – கம்பீர் திடீர் பாராட்டு

“அந்த குரங்கு ஒரு வழியாக நம்முடைய பின்பக்கத்தில் வந்துள்ளது. 23 வருடங்களுக்கு முன்பாக இலங்கைக்கு எதிராக சார்ஜாவில் இந்தியா 54 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆசிய கோப்பையில் அதற்கு பதிலடியாக அதிரடி செயல்பாடுகளை வெளிப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள் வீரர்களே. இதே ஃபார்மை உலக கோப்பையிலும் தொடர்வதை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement