நாட்டுக்காக தோனி செஞ்ச அந்த தியாகம் எத்தனை பேருக்கு தெரியும்? அவர் நம்ம கீப்பர்களின் வரமான இலக்கணம் – கம்பீர் திடீர் பாராட்டு

Gautam Gambhir 3
Advertisement

நட்சத்திர முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி இந்தியா மட்டுமின்றி உலக அளவில் வரலாறு கண்டெடுத்த மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஏனெனில் ராஞ்சி போன்ற கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ஊரில் பிறந்து நாட்டுக்காக விளையாடும் முனைப்புடன் ரயில்வே டிக்கெட் கலெக்டர் வேலையை விட்ட அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். அதனால் 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தன்னுடைய அதிரடியான பேட்டிங்கால் இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்து நிரந்தர இடத்தை பிடித்தார்.

குறிப்பாக இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக விளையாடி வெற்றியில் பங்காற்ற வேண்டும் என்ற தற்போதைய இலக்கணத்தை உருவாக்கிய அவர் அனுபவமற்ற கேப்டன்ஷிப் பதவியில் 3 விதமான வெள்ளைப்பந்து உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக உலக சாதனை படைத்தார். மேலும் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்த மகத்தான ஃபினிசாராகவும் போற்றப்படுகிறார்.

- Advertisement -

கம்பீர் திடீர் பாராட்டு:
மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்கள் உருவாவதற்கு அப்போதே சேவாக், கம்பீர் போன்ற சீனியர்களை கழற்றி விட்டு வாய்ப்பளித்த அவர் இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தின் சிறப்பாக கட்டமைத்தவராகவும் போற்றப்படுகிறார். இந்நிலையில் ஆரம்ப காலங்களில் 3வது இடத்தில் விளையாடிய தோனி கேப்டனாக பொறுப்பேற்றதும் அணி நலனுக்காக தம்முடைய இடத்தை வீரர்களுக்கு தியாகம் செய்ததாக கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

ஒருவேளை தொடர்ந்து டாப் ஆர்டரில் விளையாடியிருந்தால் தோனி இன்று பல சாதனைகளைப் படைத்திருப்பார் என்று தெரிவிக்கும் அவர் நாட்டுக்காக அவற்றை தியாகம் செய்ததாக கூறியுள்ளார். மேலும் தோனி தான் இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியதாகவும் பாராட்டும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேப்டன்ஷிப் காரணமாக தோனி ஒரு பேட்ஸ்மேனாக நிறைய சாதனைகள் படைப்பதை தவற விட்டார். பொதுவாக கேப்டனாக இருப்பவர்கள் அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருவேளை தோனி கேப்டனாக இல்லாமல் தொடர்ந்து 3வது இடத்தில் விளையாடியிருந்தால் நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளை முறியடித்திருப்பார் என்று நான் சொல்வேன். இருப்பினும் கேப்டனாக அவர் நிறைய கோப்பைகளை வென்றுள்ளார்”

இதையும் படிங்க: தோத்தா மட்டும் டிராவிட்டை திட்டுறீங்க.. ஆனா முதல் கப் ஜெயிச்சதுக்கு யாருமே பாராட்டலயே – முன்னாள் வீரர் வேதனை பதிவு

“ஆனால் அந்த கோப்பைகளுக்காக அவர் தன்னுடைய சொந்த சாதனைகளையும் ரன்களையும் தியாகம் செய்தார். மேலும் இந்திய கிரிக்கெட்டில் முதலில் கீப்பர்கள் மட்டும் தான் இருந்தனர். ஆனால் தோனி வந்த பின்பு தான் கீப்பர்கள் முதலில் பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டும் என்ற நிலைமை உருவானது. எனவே எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்தது ஆசிர்வாதமாகும். ஏனெனில் 7வது இடத்தில் விக்கெட் கீப்பராக உங்களுக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பவர் இருந்தது” என்று கூறினார்.

Advertisement