கஷ்டப்பட்ட உழைச்ச அவங்க அப்டியே போய்டணுமா? இந்திய சீனியர் வீரர்கள் பற்றிய சாஸ்திரியின் கருத்துக்கு – யுவராஜ் சிங் பதிலடி

Yuvraj Singh 6
- Advertisement -

அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டுமெனில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கடைசி நேரத்தில் தேர்வான ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர்கள் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம் என்பதில் சந்தேகமில்லை.

அதிலும் குறிப்பாக பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். இருப்பினும் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் முதல் சமீபத்திய 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை அழுத்தமான பெரிய நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்து வருகின்றனர்.

- Advertisement -

யுவராஜ் பதிலடி:
மறுபுறம் ஐபிஎல் தொடரால் நிறைய தரமான இளம் வீரர்கள் கிடைப்பதால் குறிப்பிட்ட நேரத்துக்கு பின் இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழி விட்டு சீனியர்கள் ஒதுங்க வேண்டுமென முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். சொல்லப்போனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சீனியர்களை கழற்றி விட்டு பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நாட்டுக்காக முழு மூச்சுடன் விளையாடி பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சீனியர் வீரர்கள் மரியாதையுடன் விடை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என ரவி சாஸ்திரியின் கருத்துக்கு யுவராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சீனியர்களை படிப்படியாக நீக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி சொன்னால் இதையும் அந்த சீனியர் வீரர்களிடம் சொல்லுங்கள்”

- Advertisement -

“அதாவது அவர்களால் என்ன பிரச்சனை என்று சீனியர் வீரர்களிடம் இந்தியாவில் யாரும் சொல்வதில்லை. நாட்டிற்காக தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுத்து விளையாடிய அவர்கள் மரியாதைக்கு தகுதியானவர்கள். அதன் காரணமாக அவர்களிடம் “இது கடினமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் இனிமேல் பார்க்கப்படாமல் செல்வதற்கு வாய்ப்புள்ளது” என்று வெளிப்படையாக பேசி நேரடியாக மரியாதையுடன் சொல்லலாம். மேலும் தற்போது நம்மிடம் ஏற்கனவே நாட்டுக்காக நீண்ட காலம் விளையாடிய அகர்கர் நல்ல தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார்”

இதையும் படிங்க: பும்ராவையே நொறுக்கிட்டாங்க.. 2023 உ.கோ பிளேயிங் லெவனில் அஸ்வின் கண்டிப்பா இருக்கணும்.. கவாஸ்கர் சொல்லும் காரணம்

“எனவே இளம் வீரர்களை கொண்டு வருவதற்கான திட்டம் இருந்தால் அதை நீங்கள் மரியாதையுடன் சீனியர் வீரர்களிடம் முன்கூட்டியே தெரிவிக்கலாம்” என்று கூறினார். அதாவது வருங்காலத்தை பார்ப்பதில் தவறில்லை ஆன் அதற்காக நாட்டுக்காக பல வருடங்கள் விளையாடிய சீனியர்களை முன்னறிவிப்பின்றி நீக்க வேண்டாம் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். மாறாக அவர்களிடம் வருங்காலத்தை பற்றி நேரடியாக பேசி மரியாதையுடன் விடைபெற வழிவகை செய்ய வேண்டுமென அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement