பும்ராவையே நொறுக்கிட்டாங்க.. 2023 உ.கோ பிளேயிங் லெவனில் அஸ்வின் கண்டிப்பா இருக்கணும்.. கவாஸ்கர் சொல்லும் காரணம்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கடைசி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. கடந்த 2011 உலகக் கோப்பை மற்றும் 2023 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றி அனுபவத்தை கொண்ட அவர் 2022 ஜனவரிக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்ததால் இந்த வாய்ப்பு அசாத்தியமாக பார்க்கப்பட்டது.

இருப்பினும் உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணியில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய மூவருமை இடது கை ஸ்பின்னர்களாக இருந்தனர். அதனால் எதிரணியில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க தரமான ஆஃப் ஸ்பின்னரை தேர்வு செய்யாமல் தவறு செய்து விட்டோம் என்பதை பின்னர் உணர்ந்த தேர்வுக்குழு ஆஸ்திரேலிய கோப்பையில் காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக அஸ்வினை ஆஸ்திரேலிய தொடரில் தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

கவாஸ்கர் ஆதரவு:
அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றி 4 விக்கெட்டுகளை எடுத்து தம்முடைய தரத்தைக் காட்டிய அஸ்வினுக்கு உலகக்கோப்பை அணியில் முழுமையாக ஃபிட்டாகாமல் வெளியேறிய அக்சர் பட்டேலுக்கு பதிலாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் குல்தீப், ஜடேஜா ஆகியோர் இருப்பதால் அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பும்ரா போன்ற முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களே எதிரணி பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கியதாக கவாஸ்கர் கூறியுள்ளார். எனவே மிடில் ஓவர்களில் விக்கெட்களை எடுத்து வெற்றியின் சாவியை திறக்கக்கூடியவராக இருக்கும் அஸ்வின் 11 பேர் அணியில் இருப்பது அவசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“போட்டியை புதிய பந்துடன் துவக்குவதற்கு முகமது சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் இருக்கின்றனர். மேலும் பும்ராவுடன் சேர்த்து அந்த 3 பேரும் உலகக்கோப்பையில் ஒன்றாக விளையாடுவார்களா என்பது தெரியாது. ஆனால் அந்த மூவருமே உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள். இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பும்ரா சற்று அடி வாங்கியதை நாம் பார்த்தோம். அனுபவமிக்க அவரும் சில நேரங்களில் இது போன்ற செய்த தவறை மீண்டும் செய்கிறார்.

இதையும் படிங்க: இந்திய வீரர்கள் கிடையாது. இந்த உலகக்கோப்பையில் அசத்தப்போகும் 2 ஸ்பின்னர்கள் அவர்கள் தான் – முரளிதரன் கணிப்பு

“ஆனால் அது கவலைப்பட வேண்டிய விஷயமல்ல. இருப்பினும் இங்கு தான் அஸ்வின் தம்முடைய அனுபவம் மற்றும் சாமர்த்தியத்தால் ஒரு முக்கிய காரணியாக விளையாடுவார். பெரிய போட்டிகளுக்கான 11 பேர் அணியில் அவர் விளையாடுவாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் மிடில் ஓவர்களில் எதிரணி பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க விடாத அளவுக்கு உங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கக் கூடிய பவுலராக இருக்கிறார். அது எதிரணி பெரிய ஸ்கோரை குவிப்பதையும் கட்டுப்படுத்தும்” என்று கூறினார்.

Advertisement