இந்திய வீரர்கள் கிடையாது. இந்த உலகக்கோப்பையில் அசத்தப்போகும் 2 ஸ்பின்னர்கள் அவர்கள் தான் – முரளிதரன் கணிப்பு

Muralitharan
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023-ஆம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கவனத்தை ஈர்த்துள்ளது. இம்முறை இந்திய மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகம் இருக்கும் என்றும் அதனாலேயே இந்த தொடரில் பங்கேற்கவுள்ள பத்து அணிகளும் தங்களது அணியில் முதன்மையான சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியும் தங்களது அணியில் குல்தீப் யாதவ், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளது.

இந்த 2023-ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் குல்தீப் யாதவ் இந்த உலகக்கோப்பை தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ள அஸ்வினும் தனது காம்பேக் சீரியஸில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் 2 ஸ்பின்னர்கள் யார்? என்பது குறித்து யூடியுப் சேனல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பதில் அளித்துள்ளார். அப்படி அவர் அளித்த பதிலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யாரையும் தேர்வு செய்யாமல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் முரளிதரன் கூறுகையில் : இந்த உலகக் கோப்பை தொடரானது இந்தியாவில் நடைபெற்றாலும் என்னை பொருத்தவரை ரஷீத் கான் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார். ஏனெனில் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை காட்டிலும் அவரது ஆக்ஷன் சற்று வித்தியாசமானது. அதோடு பேட்ஸ்மேன்களை திணற வைக்கும் அளவிற்கு அவரது பந்துகள் கணிக்க முடியாதவைகளாக இருக்கும்.

- Advertisement -

அதே போன்று மற்றொரு வீரராக நான் இலங்கை வீரர் மகேஷ் தீஷனாவை தேர்வு செய்கிறேன். ஏனெனில் அவரும் சாதாரணமான ஸ்பின்னர்களை போன்று அல்லாமல் அஜந்தா மென்டிஸ் போன்று அதிகளவு கேரம் பால்களை பயன்படுத்தக்கூடியவர். எனவே இவர்கள் இருவரும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்பின்னர்களாக இருப்பார்கள் என்று தான் நம்புவதாக முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு.. இந்திய ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட பாக் வாரிய தலைவர் – புதிய பல்டி அறிக்கை

அதோடு மட்டுமின்றி தொடர்ந்து பேசிய அவர் : இந்திய மைதானங்களில் நாம் குறைந்தது இரண்டு ஸ்பின்னர்களையாவது பயன்படுத்தி ஆக வேண்டும். ஏனெனில் டி20 போட்டிகளை போன்று இல்லாமல் 50 ஓவர் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு முழுவதுமாக 10 ஓவர்கள் கிடைக்கும். எனவே அவர்களால் நிச்சயம் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கத்தை செலுத்த முடியும். நாம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வெளிநாடுகளில் விளையாடவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் விளையாடுவதால் ஸ்பின்னர்கள் இந்த தொடரில் கட்டாயம் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என முரளிதரன் கூறினார்.

Advertisement