
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் போட்டிகளில் மிக குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அதோடு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சதம் அடித்த அவர் ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார்.
இப்படி ஐபிஎல் தொடரில் கலக்கிய அவருக்கு 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியிலும் இடம் கிடைக்க தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் மழை பொழிந்து வருகிறார். எந்த ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராகவும் அதிரடி காட்டும் இவரை வெகுவிரைவில் இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என்ற ஆதரவும் அவருக்கு குவிந்து வருகிறது.
அதோடு இவரது அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராகவும் இவர் பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் வைபவ் சூரியவன்சியின் இந்த சிறப்பான செயல்பாடு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் அவரது துணிச்சலான ஆட்டத்தை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில் குறிப்பிட்டதாவது :
வைபவ் சூர்யவன்சி ஒரு மிகச்சிறந்த திறமைசாலி என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரது அணுகுமுறையில் கொஞ்சம் கூட பயம் கிடையாது. எந்த ஒரு அணிக்கு எதிராகவும், எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் அவர் அதிரடியாக ரன்களை குவிக்கிறார். அதை பார்த்துதான் அவரை எனக்கு மிகவும் பிடித்தது. அதோடு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வலைப்பயிற்சி செய்யும்போது அவரை பார்த்திருக்கிறேன்.
இதையும் படிங்க : 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் – சூரியகுமார் யாதவ் அறிவிப்பு
பந்து கழுத்தை நோக்கி வந்தாலும் அவர் வேகமாக ஹூக் ஷாட் அல்லது ப்ளிக் ஷாட் ஆகியவற்றை பயன்படுத்த தவறியதில்லை. எனவே நிச்சயம் அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக மாறுவார் என நான் நினைக்கிறேன் என்று யுவராஜ் சிங் பாராட்டியுள்ளார்.