இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று ஜனவரி 25-ஆம் தேதி கவுகாத்தி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டியானது இன்று கவுகாத்தி நகரில் துவங்கி நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி தற்போது முதலில் விளையாடி வருகிறது.
இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை இந்திய அணி கைப்பற்ற முயற்சி காட்டும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாசின் போது அறிவிக்கையில் : இன்றைய மூன்றாவது போட்டியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பும்ரா மற்றும் ரவி கிருஷ்ணா ஆகியோர் விளையாடுவதாக அறிவித்தார். அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : இஷான் கிஷன் ஆடிய இந்த இன்னிங்ஸ் அபிஷேக் சர்மாவை மறக்க வச்சிடுச்சி – முகமது கைப் கருத்து
1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஷிவம் துபே, 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரிங்கு சிங், 8) ஹர்ஷித் ராணா, 9) ரவி பிஷ்னாய், 10) குல்தீப் யாதவ், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.



