நன்றி சொன்ன அபிஷேக் சர்மா.. அடிப்பதற்கு செருப்பு, குச்சியுடன் வித்யாசமாக பதிலளித்த யுவராஜ் சிங்

Yuvraj SIngh 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பட் கமின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக வலுவான நடப்பு சாம்பியன் சென்னைக்கு எதிராக நடைபெற்ற 4வது போட்டியில் ஹைதெராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சுமாராக விளையாடி வெறும் 166 ரன்களை மட்டுமே இலக்காக கொடுத்தது.

அதைத் துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 37, டிராவிஸ் ஹெட் 31, ஐடன் மார்க்ரம் 50* ரன்கள் அடித்து 18.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் சென்னை தங்களுடைய 2வது தோல்வியை பதிவு செய்து பின்னடைவுக்குள்ளானது. முன்னதாக அந்தப் போட்டியில் 166 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு முகேஷ் சௌத்ரி வீசிய 2வது ஓவரில் 26 ரன்களை குவித்த அபிஷேக் ஷர்மா மொத்தம் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 37 (12) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

வித்யாச பாராட்டு:
அந்த வகையில் 308.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ஒரே ஓவரில் போட்டியை தலைகீழாக மாற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். மேலும் தம்முடைய இந்த அதிரடியான ஆட்டத்திற்கு ஜாம்பவான்கள் யுவராஜ் சிங் மற்றும் பிரைன் லாரா ஆகியோருக்கு நன்றி கூறுதாகவும் அவர் போட்டியின் முடிவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அப்போட்டியில் சிறப்பாக விளையாடியும் கடைசியில் சுமாரான ஷாட்டை அடித்து அபிஷேக் சர்மா அவுட்டானதாக யுவராஜ் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் “ஒரு நபரை குச்சியுடன் அடிக்க மற்றொரு நபர் ஜாலியாக துரத்தும்” சிறிய நகைச்சுவை வீடியோவை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் வித்தியாசமாக அபிஷேக் ஷர்மாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“நான் உங்கள் பின்னால் இருக்கிறேன் தம்பி. மீண்டும் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். ஆனால் மோசமான ஷாட்டை அடித்து அவுட்டானீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். சொல்லப்போனால் மும்பைக்கு எதிராக 63 (23) ரன்கள் விளாசிய ஆட்டநாயகன் விருது வென்ற அபிஷேக் ஷர்மா அப்போட்டியில் மோசமான ஷாட்டை அடித்து அவுட்டானார்.

இதையும் படிங்க: மொய்ன் அலி, தீக்சனாவை இப்படியா யூஸ் பண்ணுவீங்க.. ருதுராஜ் கேப்டன்ஷிப்பை விமர்சித்த ஹெய்டன், பதான்

அப்போது உங்களை அடிக்க ஸ்பெஷல் செருப்பு காத்திருப்பதாக அபிஷேக் சர்மாவுக்கு மே 27ஆம் தேதி அதே ட்விட்டரில் யுவராஜ் கொடுத்துள்ள பாராட்டு பின்வருமாறு. “அருமையான இன்னிங்ஸ் சார். ஆனால் அவுட்டாவதற்கு என்ன ஒரு அருமையான ஷாட்டை விளையாடினீர்கள். பெரியவர்கள் நிறைய சொல்லியும் கேட்பதில்லை. ஸ்பெஷல் செருப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. ஹென்றிச் க்ளாஸென் மகத்தான இன்னிங்ஸ் விளையாடினார்” என்று ஜாலியாக பாராட்டியுள்ளார்

Advertisement