மொய்ன் அலி, தீக்சனாவை இப்படியா யூஸ் பண்ணுவீங்க.. ருதுராஜ் கேப்டன்ஷிப்பை விமர்சித்த ஹெய்டன், பதான்

Ruturaj CSK2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை தங்களுடைய 4வது போட்டியில் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சுமாராக விளையாடி வெறும் 166 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சிவம் துபே 45, ரகானே 35 ரன்கள் எடுத்தனர்.

அதை சேசிங் செய்த ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 37, ஐடன் மார்க்கம் 50, டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் எடுத்து 18.1 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். சென்னையின் இந்த தோல்விக்கு பேட்டிங்கில் எக்ஸ்ட்ராவாக 20 ரன்கள் எடுக்க தவறியது, டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது போன்ற பல்வேறு சொதப்பல்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:
இந்நிலையில் இபோட்டியில் ருதுராஜ் கைக்வாட் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது தோல்விக்கு காரணமானதாக மேத்தியூ ஹைடன் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருடைய சில முடிவுகள் கூர்மையாக இல்லை. பந்து வீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்து பங்காற்றிய ஆல் ரவுண்டர் மொயின் அலி பேட்டிங்கில் மேலே களமிறங்கியிருக்க வேண்டும்”

“அவருக்கு அடித்து நொறுக்குவதற்கான சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். முதல் 6 ஓவரில் 49/1 ரன்கள் எடுத்த சென்னை பவர் பிளே ஓவர்களுக்குள் தடுமாறினார்கள். என்னைப் பொறுத்த வரை அந்த இடத்தில் ஒருவர் தைரியமாக விளையாடியிருக்க வேண்டும். அதை மொயின் அலி செய்திருப்பார். அதே போல பந்து வீச்சில் அவர்கள் உடனடியாக டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக தீக்சனாவை ஆரம்பத்திலேயே கொண்டு வந்திருக்க வேண்டும். 4வது ஓவர் வரை காத்திருக்க வேண்டியதில்லை” என்று கூறினார்.

- Advertisement -

மறுபுறம் ருதுராஜ் ஆரம்பத்திலேயே சஹார் மற்றும் முகேஷ் சௌத்ரிக்கு ஓவர்களை கொடுத்தார். அந்த வாய்ப்பில் முதல் 2 ஓவரிலேயே 46 ரன்கள் குவித்த ஹைதராபாத் வெற்றியை பறித்து விட்டது. இது பற்றி இர்பான் பதான் பேசியது பின்புறமாறு. “ஹெய்டன் சொல்வது போல டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக தீக்சனாவை பயன்படுத்தியிருந்தால் முகேஷ் சௌத்ரிக்கு மூச்சு விட கொஞ்சம் வாய்ப்பு கிடைத்திருக்கும்”

இதையும் படிங்க: ஷிவம் துபேவோட எல்லாம் ஓவர்.. கடைசி 8 ஓவரில் சி.எஸ்.கே அணி செய்த தவறு – தோல்விக்கு காரணமே அதுதான்

“அவரை நீங்கள் பின்னர் பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும் புதிய பந்தில் வீசுவதே அவருடைய பலமாகும். ஆனால் அவர் கடந்த 15 மாதமாக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடவில்லை” என்று கூறினார். இறுதியாக ஹைடன் பேசியது பின்வருமாறு. “உங்களை சுற்றி தோனி இருக்கும் போது சிறந்த கேப்டனாக செயல்படுவது எளிதல்ல. இருப்பினும் அழுத்தங்களை தாண்டி சரியான முடிவுகளை எடுப்பதில் ருதுராஜ் கொஞ்சம் வேகமாகவும் கூர்மையாகவும் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement