ஷிவம் துபேவோட எல்லாம் ஓவர்.. கடைசி 8 ஓவரில் சி.எஸ்.கே அணி செய்த தவறு – தோல்விக்கு காரணமே அதுதான்

Dube
- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்த நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-ஆவது லீக் போட்டியில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சென்னை அணியானது இந்த தொடரில் தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்திருக்கிறது. அதோடு அடுத்தடுத்த போட்டியில் அடைந்த தோல்வியால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கும் சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி முதல் 10 ஓவர்களின் 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் என்கிற நல்ல நிலையில் இருந்தது.

- Advertisement -

ஆனால் அடுத்த 10 ஓவர்களில் மேலும் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெறும் 81 ரன்கள் மட்டுமே குவித்ததால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்த போட்டியில் சென்னை அணியின் வீரர்கள் இரண்டாம் பாதியில் அதிரடியாக விளையாடாமல் மெத்தனம் காட்டியதே இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் மிடில் ஓவர்களில் ஷிவம் துபே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தும் அதன் பிறகு மற்ற வீரர்கள் செய்த தவறால் தான் இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி தோல்வியை சந்தித்ததாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஒரு கட்டத்தில் ஷிவம் துபே 4 சிக்ஸர், 2 பவுண்டரி என 24 பந்துகளில் 45 ரன்கள் குவித்து அணியின் ரன் வேகத்தை அதிகரித்துவிட்டு ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பின்னர் அடுத்ததாக கடைசி 8 ஓவரில் டேரல் மிட்சல், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் இருந்தும் கூட அந்த 8 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை.

இதையும் படிங்க : ஆர்சிபி போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும்.. ஏழை குடும்பத்துக்கு ராஜஸ்தான் செய்யவுள்ள உதவி

ஒருவேளை 15 ஓவர்களை தாண்டி சென்னை அணி 4-5 சிக்ஸர்களை அடித்திருந்தால் கூட சிஎஸ்கே 180-190 ரன்களை எட்டியிருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் பவுண்டரி அடிக்க வீரர்கள் கஷ்டப்பட்டனர். போதிய அளவு ரன்கள் ஸ்கோர் போர்டில் இல்லாததே சென்னை அணியின் தோல்விக்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

Advertisement