ஆர்சிபி போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும்.. ஏழை குடும்பத்துக்கு ராஜஸ்தான் செய்யவுள்ள உதவி

Rajasthan Royals
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. அதில் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 3 வெற்றிகளை பெற்றுள்ளது.

அதனால் புள்ளி பட்டியலிலும் 2வது இடத்தில் ஜொலிக்கும் அந்த அணி இப்போட்டியில் தடுமாற்றமாக செயல்பட்டு வரும் பெங்களூருவை வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் விளையாட உள்ளது. மறுபுறம் 4 போட்டிகளில் 3 தோல்வி 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ள பெங்களூரு புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் தடுமாறி வருகிறது.

- Advertisement -

நெகிழ்ச்சியான அறிவிப்பு:
எனவே வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு களமிறங்க உள்ளது. இந்நிலையில் பெங்களூருவுக்கு எதிராக நடைபெறும் இந்த போட்டியில் ஸ்பெஷலான இளஞ்சிவப்பு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளதாக ராஜஸ்தான் நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள கிராமப்புற பெண்களின் முன்னேற்றதுக்கு நிதியுதவி கொடுக்கும் நோக்கத்துடன் இந்த ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளதாக அந்த அணி நிர்வாகம் கூறியுள்ளது.

அதன் படி இப்போட்டியில் விற்பனையாகும் ஒவ்வொரு 100 டிக்கெட்டில் கிடைக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகை கிராமப்புற பெண்களின் ஆதரவுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த 5 வருடங்களாக இதை செய்து வரும் தங்களுடைய அணி 15 மில்லியனுக்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களுக்கு உதவி செய்துள்ளதாக ராஜஸ்தான் அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜாக் லெஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

அது போக இப்போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் கிராமப்புறங்களில் இருக்கும் 6 ஏழை குடும்பங்களின் வீடுகளில் சூரிய சக்தியில் இயங்கும் மின்சார வசதியை செய்து கொடுக்க உள்ளதாகவும் ராஜஸ்தான் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது இப்போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் மின்சாரம் வசதி இல்லாத 6 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அந்த திறமை யாரிடமும் இல்ல.. அதுக்காகவே இந்தியாவுக்கு சிவம் துபே 2024 டி20 உ.கோ’யில் ஆடணும்.. இர்பான் பதான்

ராஜஸ்தான் அணியின் மனதை தொடும் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜெய்ஸ்வால், பட்லர், மேக்ஸ்வெல், விராட் கோலி, டு பிளேஸிஸ் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அதிக சிக்ஸர்கள் அடித்து பல வீடுகளில் வெளிச்சத்தை உண்டாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு சிக்சர்கள் அடிக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement