அந்த ஒரு திறமைக்காகவே இந்தியாவுக்கு சிவம் துபே 2024 டி20 உ.கோ’யில் ஆடணும்.. இர்பான் பதான்

Irfan Pathan 5
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிராக ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற்ற நான்காவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்றது. அந்தப் போட்டியில் சிவம் துபேவின் ஆட்டம் மட்டுமே சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது என்றே சொல்லலாம்.

ஏனெனில் ஆரம்ப முதலே ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்லோவான கட்டர் பந்துகளை வீசினார். அதை சரியாக கணிக்க முடியாமல் கேப்டன் ருதுராஜ், ரச்சின், ரகானே, ரவீந்திர ஜடேஜா போன்ற அனைத்து சென்னை பேட்ஸ்மேன்களும் திணறலாக பேட்டிங் செய்தனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் கொஞ்சமும் தடுமாறாமல் தம்முடைய ஸ்டைலில் வெளுத்து வாங்கிய சிவம் துபே 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 45 (24) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இர்பான் பதான் பாராட்டு:
சொல்லப்போனால் ஒருவேளை அவர் மட்டும் 45 ரன்களை எடுக்காமல் போயிருந்தால் அப்போட்டியில் சென்னை 150 ரன்கள் தாண்டியிருக்குமா என்பது சந்தேகமாகும். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடிய சிவம் துபே 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று ஜாம்பவான் யுவராஜ் சிங் சமீபத்தில் பாராட்டியிருந்தார்.

அந்த வரிசையில் இணைந்துள்ள இர்பான் பதான் தற்சமயத்தில் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்குவதில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே துபேவை நெருங்க முடியாது என்று கூறியுள்ளார். எனவே சிவம் துபே 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் மீது நான் நெருக்கமான கண்ணை வைத்திருக்கிறேன். அவரை நான் உலகக் கோப்பை அணியில் எடுத்துச் செல்வேன். ஏனெனில் அவர் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்குகிறார். அவர் களத்திற்கு சென்று செட்டிலாக முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த வருடத்தை போலவே இந்த ஐபிஎல் தொடரிலும் மணிகட்டு மற்றும் விரல் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் அசத்துவதை நாம் பார்க்கிறோம்”

இதையும் படிங்க: முகேஷ் சௌத்ரி இல்ல.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் இது தான்.. பயிற்சியாளர் பிளெமிங் கருத்து

“அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் மோசமானவர் கிடையாது என்பதையும் நினைவில் வையுங்கள். அவர் மும்பையில் இருந்து வந்தவர் என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர். மும்பையில் எப்போதும் நல்ல பவுன்ஸ் இருக்கும். மிடில் ஓவர்களில் இவரைப்போல் அசத்தக்கூடிய வீரர்கள் யார்? எனவே தற்சமயத்தில் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்குவதில் சிவம் துபேவின் திறமையை நெருங்கும் அளவுக்கு மற்ற வீரர்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement