முகேஷ் சௌத்ரி இல்ல.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் இது தான்.. பயிற்சியாளர் பிளெமிங் கருத்து

Stephen Fleming 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 4வது போட்டியில் ஹைதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிவம் துபே 45, ரகானே 35 ரன்கள் எடுத்த உதவியுடன் 166 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது.

ஆனால் அதை சேசிங் செய்த ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 37, டிராவிஸ் ஹெட் 31, ஐடன் மார்க்ரம் 50 ரன்கள் எடுத்து 18.1 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் மொயின் அலி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் சிஎஸ்கே தங்களுடைய 2வது தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

தோல்வியின் காரணம்:
சென்னையின் இந்த தோல்விக்கு டிராவிஸ் ஹெட் 0 ரன்களில் கொடுத்த கேட்ச்சை மொய்ன் அலி தவற விட்டது, அபிஷேக் சர்மாவுக்கு எதிராக 2வது ஓவரில் முகேஷ் சௌத்ரி 27 ரன்கள் கொடுத்தது, பவர்பிளே முடிவில் 78 ரன்கள் வாரி வழங்கியது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் இப்போட்டியில் முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு பதிலாக 2022இல் அசத்திய முகேஷ் சவுத்ரி சேர்க்கப்பட்டதாக ஸ்டீபன் பிளம்பிங் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முகேஷ் சௌத்ரி மோசமாக செயல்படவில்லை என்று தெரிவிக்கும் அவர் பேட்டிங்கில் எக்ஸ்ட்ராவாக 15 ரன்கள் எடுக்கத் தவறியதே தோல்வியை கொடுத்ததாக கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “சந்தேகமின்றி இதுவும் ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாகும். ரஹ்மான் இங்கே இல்லாததால் நாங்கள் அவரை பயன்படுத்த முடியாது. இருப்பினும் இப்படி வீரர்கள் பாதியிலேயே விளையாடாமல் போவது தொடரின் ஒரு அங்கமாகும்”

- Advertisement -

“அதனால் முகேஷ் சௌத்ரியை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. கடந்த காலங்களில் அவர் எங்களுக்கு நன்றாக செயல்பட்டார். இன்று அவருடைய நாளாக அமையவில்லை. எனவே இது ஐபிஎல் தொடரில் வீரர்களை கையாள்வது பற்றிய விஷயமாகும். ஒரு வீரர் இல்லாத போது நீங்கள் புதிய ஹீரோவை கண்டறிவதற்கான வழியை கண்டறிகிறீர்கள். அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை”

இதையும் படிங்க: இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர்ல ரோஹித் சர்மா இதை செய்யவும் வாய்ப்பு இருக்கு – ஸ்ரீசாந்த் கருத்து

“இருப்பினும் கடினமாக பயிற்சி செய்து வேலை செய்ய வரும் புதிய வீரர்கள் மீது நாங்கள் நம்பிக்கையை போடுகிறோம். முதல் 5 – 6 ஓவர்கள் பேட்டிங் செய்வதற்கு சிறப்பானதாக இருந்தது. எனவே முதல் ஓவரில் விக்கெட்டை எடுத்து 2வது ஓவரில் எதிரணியை கட்டுப்படுத்தி இருந்தால் எங்களுடைய இலக்கு போட்டி மிகுந்ததாக இருந்திருக்கும். ஆனால் 15 ரன்கள் குறைவாக எடுத்த நாங்கள் பந்து வீச்சிலும் முதல் 6 ஓவர்களில் அசத்தவில்லை” என்று கூறினார்.

Advertisement