இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர்ல ரோஹித் சர்மா இதை செய்யவும் வாய்ப்பு இருக்கு – ஸ்ரீசாந்த் கருத்து

Sreesanth
- Advertisement -

மும்பை அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை வாங்கிக் கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஹார்டிக் பாண்டியாவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் கேப்டன் பதவியை வழங்கியிருந்ததில் இருந்து ரசிகர்கள் மும்பை அணிக்கு தங்களது ஆதரவுகளை வழங்க தவறியது மட்டுமின்றி பாண்டியாவையும் எல்லா மைதானங்களிலும் அவமானப்படுத்தி வருகின்றனர்.

மேலும் பாண்டியாவின் ஆட்டிடியூடும் சக வீரர்கள் மத்தியிலும் சற்று மோசமாக இருக்கவே மும்பை அணிக்குள் பிளவு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இப்படி சலசலப்பாக சென்று கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் சூரியகுமார் யாதவ் உள்ளே வந்தால் மட்டுமே அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி முடித்துள்ள மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ள வேளையில் நடப்பு ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் வேளையில் நிச்சயம் இந்த தொடரில் ரோகித் சர்மா சுதந்திரமாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை கூட கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த ஆண்டு ரோஹித் சர்மா கேப்டன்சி சுமை இல்லாததால் சுதந்திரமாக விளையாடுவார். எனக்கு ரோகித் சர்மாவை பற்றி நன்றாக தெரியும். அவர் சுதந்திரமாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்க்க ஆரம்பித்து விட்டால் நிச்சயம் ஆரஞ்சு தொப்பியை நோக்கி செல்ல கூட முயற்சி செய்வார்.

- Advertisement -

இந்த சீசனில் ரோகித் சர்மாவின் ஆட்டம் ஒரு போட்டியில் சூடு பிடித்தால் கூட அதன் பிறகு பிரமாதமாக இருக்கும். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் வழிநடத்த வில்லை என்றாலும் அணிக்கு உறுதுணையாக நின்று நிச்சயம் அனைத்து உதவிகளையும் செய்வார்.

இதையும் படிங்க : இதுக்கு பேட்டிங் செய்ய வராமையே இருந்துருக்கலாம்.. தோனி மீது மைக்கேல் வாகன், சைமன் டௌல் அதிருப்தி

ரோகித் சர்மா போன்ற ஒரு வீரர் கேப்டன் பதவி இல்லாமல் இருக்கும்போது நிச்சயம் அதிரடியாக விளையாட முயற்சி செய்வார் எனவே வெகுவிரைவில் ரோஹித் சர்மாவின் அதிரடியை காண காத்திருங்கள் என ஸ்ரீசாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement