இதுக்கு பேட்டிங் செய்ய வராமையே இருந்துருக்கலாம்.. தோனி மீது மைக்கேல் வாகன், சைமன் டௌல் அதிருப்தி

Micheal Vaughan 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 4வது போட்டியில் ஹைதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹைதராபாத் நகரில் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிவம் துபே 45, ரகானே 35 ரன்கள் எடுத்த உதவியுடன் 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது.

அதை சேசிங் செய்த ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 37, டிராவிஸ் ஹெட் 31, ஐடன் மார்க்கம் 50 ரன்கள் அடித்து 18.1 ஓவரிலேயே எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் மொயின் அலி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த சென்னை பின்னடைவுக்கு உள்ளானது. முன்னதாக இந்த போட்டியில் ஹைதராபாத் பவுலர்கள் ஆரம்பம் முதலே ஸ்லோவான கட்டர் பந்துகளை வீசினார்கள்.

- Advertisement -

வராமையே இருக்கலாம்:
அதில் சிவம் துபேவை தவிர்த்து மற்ற அனைத்து சென்னை பேட்ஸ்மேன்களும் திண்டாட்டமாக பேட்டிங் செய்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதை விட இப்போட்டியில் பெரும்பாலான சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் திணறிய போது தோனி களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஏனெனில் கடந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் 3 பவுண்டரி 4 சிக்சர்கள் 37* (16) ரன்கள் குவித்து அபாரமாக பேட்டிங் செய்தார். அதனால் அடுத்து வரும் போட்டிகளில் முன்கூட்டியே களமிறங்குமாறு நிறைய முன்னாள் வீரர்கள் அவருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காத தோனி இப்போட்டியில் 19.3வது ஓவரில் களமிறங்கி 1* (2) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அது எந்த வகையிலும் சிஎஸ்கே அணிக்கு உதவவில்லை. இந்நிலையில் இப்போட்டியில் வெறும் 3 பந்துகள் மட்டுமே மீதமிருந்த போது வந்த தோனி பேசாமல் பேட்டிங் செய்ய வராமலேயே இருந்திருக்கலாம் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் மறைமுகமாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 4, 6, 6, 6, 4.. ஒரே ஓவரில் 26 ரன்ஸ்.. கிறிஸ் கெயிலை முந்திய அபிஷேக் சர்மா.. ஐபிஎல் வரலாற்றில் மெகா சாதனை

“கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் தோனி என்ன செய்தார் என்பதை வைத்து இப்போட்டியில் அவர் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வராதது எனக்கு திகைப்பாக இருந்தது. வெறும் 3 பந்தை மட்டும் எதிர்கொள்வதற்காக அவர் ஏன் வந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் சைமன் டௌல் பேசியது பின்வருமாறு. “இது போன்ற ஸ்லோயர் பந்துகளை அதிரடியாக எதிர்கொள்ளும் திறமையும் பவரும் தோனியிடம் உள்ளதை அந்த கடந்த காலங்களில் பார்த்தோம். ஆனாலும் அதை எதிர்கொள்ள அவர் வராதது ஆச்சரியமாகும்” என்று கூறினார்.

Advertisement